திவ்யா பத்மினிக்கு சீரியலில் கிடைத்த அங்கீகாரம்!

Bookmark and Share

திவ்யா பத்மினிக்கு சீரியலில் கிடைத்த அங்கீகாரம்!

பிள்ளை நிலா சீரியலில் ஹேமா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா பத்மினி. கேரளாவைச் சேர்ந்தவரான இவர், சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே, தமிழ் சினிமாவில், புலி வேசம், அய்யன், காசேதான் கடவுளடா, விளையாடவா என பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், இப்படி பல படங்களில் நடித்தபோதும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்காத ரீச், இப்போது நடித்து வரும் பிள்ளை நிலா சீரியலில் கிடைத்து வருகிறதாம். அவர் எங்காவது பொதுமக்கள் கூடும் பகுதிக்கு சென்றால், அதோ பிள்ளை நிலா ஹேமா என்கிறார்களாம். அதோடு, தங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்று நினைத்து பாசத்துடன் பழகுகிறார்களாம்.

அதனால், சினிமாவில் கிடைக்காத பெயரும், புகழும் சின்னத்திரையில்தான் கிடைக்கிறது எனறு கூறும் திவ்யா பத்மினிக்கு, இப்போதும் சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கதவை தட்டுகிறதாம். ஆனால், அவருக்குத்தான் சினிமாவில் நடிப்பதில் விருப்பம் இல்லையாம். அதனால் தேடிச்செல்லும் வாய்ப்புகளைகூட திருப்பி அனுப்பி வருகிறாராம் திவ்யா பத்மினி.

மேலும், தற்போது தமிழில் மட்டுமின்றி, தனது தாய்மொழியான மலையாள சீரியல்களிலும் நடித்து வருவதாக கூறும் அவர், சினிமாவில் அவுட்டோர் செல்ல வேண்டும், கிளாமராக நடிக்க வேண்டும் என்று பல பிரச்சினைகள் இருக்கும்.

ஆனால் டிவியில் அப்படி எந்த பிரச்சினையும் இல்லை. அலுவலகம் சென்று வருவதுபோல் உள்ளது. அதனால் ஆயுசுக்கும் சின்னத்திரை நடிகையாக இருக்க நான் ஆசைப்படுகிறேன் என்கிறார் திவ்யாபத்மினி.


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
சிறையில் வாடும் கைதிகளுக்காக பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு!
இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!
வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு - இதாவது கை கொடுக்குமா?
வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு
2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்
டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions