மீண்டும் சீரியல்களில் நடிப்பாரா திவ்யதர்ஷினி?

Bookmark and Share

மீண்டும் சீரியல்களில் நடிப்பாரா திவ்யதர்ஷினி?

விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி. காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், விஜய் அவார்டுஸ் போன்ற நிகழ்ச்சிகளில் ஆங்கராக இருந்த இவர், முன்னதாக, செல்வி, அரசி, கனவுகள் ஆயிரம் உள்பட சில சீரியல்களிலும் நடித்துவந்தார்.

அதேபோல், தமிழ் சினிமாவில் நள தமயந்தி, உள்ளம் கேட்குமே, சரோஜா என சில படங்களிலும் நடித்தார். இருப்பினும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பிரபலமான பிறகு அவர் நடிப்பு பக்கம் போகவில்லை. 

ஆனால் இப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அவரை வருவதே இல்லை. அதேசமயம், சினிமா விழாக்களில் ஆங்கராக அங்கம் வகிக்கத் தொடங்கியிருக்கிறார் டிடி. 

அதே சமயம் நிஜ வாழ்க்கையிலும் இல்லத்தரசியாகி விட்டதால், அழுத்தமான குடும்பப்பெண் வேடங்களில் நடிக்க சீரியல் டைரக்டர்கள் அவரை மீண்டும் நடிப்பதற்கு அழைப்பு விடுக்கின்றனர்.

ஆனால், அவர்களிடத்தில் நடிக்கிறேன், நடிக்கவிலலை என்று எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார் திவ்யதர்ஷினி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions