நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்

Bookmark and Share

நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி. பின்னர் தெலுங்கில் சேகர் கம்முலு இயக்கிய பிடா படத்தில் நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கில் ‘கரு’ என்ற பெயரில் தயாராகி தற்போது ‘தியா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் கதாநாயகன் நாகசவுரியாவுக்கும், சாய் பல்லவிக்கும் இடையே படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து நாகசவுரியா கூறும்போது, “படப்பிடிப்பில் சாய் பல்லவி நடந்து கொண்ட விதம் சகிக்க முடியாததாக இருந்தது. சிறிய விஷயங்களுக்கெல்லாம் கோபித்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்” என்றார்.

இதற்கு சாய்பல்லவி ஏற்கனவே மறுப்பு தெரிவித்து இருந்தார். தற்போது மீண்டும் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து சாய்பல்லவி கூறியதாவது:-

“நாகசவுரியாவுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. படப்பிடிப்பில் எனது கதை, கதாபாத்திரம் பற்றி மட்டுமே யோசிப்பேன். அதை வீட்டில் வந்து 10 விதமாக நடித்து பயிற்சியும் எடுப்பேன். மற்றவர்களை பொருட்படுத்துவது இல்லை. டைரக்டரிடம் மட்டும் எனது நடிப்பு குறித்து விவாதிப்பேன்.

நான் நாகசவுரியாவிடம் பேசாமல் இருந்ததால் ஒருவேளை என்னை அவர் தவறாக புரிந்து இருக்கலாம். என்னால் யாரும் காயப்பட கூடாது என்று நினைப்பேன்.

நாகசவுரியா சிறந்த நடிகர். படப்பிடிப்பில் அமைதியாக இருப்பார். என்மீது புகார் கூறிய பிறகு அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவருடன் பேச முடியவில்லை. நாகசவுரியா மட்டுமின்றி வேறு எந்த நடிகருடனும் எனக்கு மோதல் எதுவும் இல்லை.

நான் டாக்டருக்கு படித்து இருக்கிறேன். டாக்டர் தொழில் செய்ய வேண்டும் என்று எனக்கு எப்போதாவது ஆசை வந்தால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்”.

இவ்வாறு சாய்பல்லவி கூறினார். 


Post your comment





Related News
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
இதுக்கு தான் கிளாமரா நடிக்காம இருக்கேன் - ரகசியத்தை போட்டுடைத்த மலர் டீச்சர்.!
என்னமா இது? பிரபல இயக்குனரிடமு வாங்கி கட்டி கொண்ட சாய் பல்லவி - என்னாச்சு?
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவ்ளோ தான் - உச்சகட்ட கடுப்பில் சாய் பல்லவி.!
ட்ராபிக்கில் சிக்கிய சாய் பல்லவி செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - லீக்கான புகைப்படம் உள்ளே.!
சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் கரு!
விஜய் சார் தான் இவை அனைத்திற்கும் காரணம்- சாய் பல்லவி ஓபன் டாக்
கதையை கேட்காமலே விஜய் படத்தை நிராகரித்த சாய் பல்லவி - வெளிவந்த திடுக் தகவல்.!
நான் நடிக்க ஆரம்பித்ததே தற்செயலாக அமைந்தது தான் - நாயகி சாய் பல்லவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions