தள்ளிப்போனது நாகசைதன்யா பட பாடல்கள்!

Bookmark and Share

தள்ளிப்போனது நாகசைதன்யா பட பாடல்கள்!

தெலுங்கு திரையின் முன்னணி நடிகரான நாகார்ஜூனாவின் மகனும் வளர்ந்து வரும் நடிகருமான நாகசைதன்யா டுசேய் (Dochay) என்ற படத்தின் படப்பிடிப்பில் மிகவும் மும்முரமாக பணியாற்றி வருகின்றார்.

சுவாமி ர ர என்ற வெற்றி படத்தின் இயக்குநர் சுதீர் வர்மாவின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பாடல்கள் நாளை ஏப்ரல் 3 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

பிவிஎஸ்என் பிரசாத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நடிகர் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக கிரீத்தி சனோன் நடித்து வருகின்றார். இசையமைப்பாளர் சன்னி எம்.ஆரின் இசையில் ஏற்கனவே வெளிவந்துள்ள இப்படத்தின் நான்கு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

நாளை இப்படத்தின் பிற பாடல்களும் வெளிவரும் என எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இப்படத்தின் பாடல்கள் வெளியீடு ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions