இந்த ஜோடிக்கு உயரம் ஒரு பிரச்னை அல்ல!

Bookmark and Share

இந்த ஜோடிக்கு உயரம் ஒரு பிரச்னை அல்ல!

எப்பொழுதுமே நடிகர்களுக்கு உயரம் ஒரு பிரச்னையாக இருப்பது இல்லை. ஆனால் நடிகைகளுக்கு பிரச்னை தான். இதில் விதி விலக்காக  அழகு நடிகையான கிரித்தி சனோன் தனது உயரம் ஒரு பிரச்னையே கிடையாது என்று கூறியுள்ளார்.

அவர் தற்போது பிரபல நடிகர் நாக சைதன்யாவுடன் தோசே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த ஜோடி தங்களுக்கு உயரம் ஒரு பிரச்னை இல்லை என்று கூறியுள்ளது. அதாவது கிரித்தியை விட நாக சைதன்யா உயரம் கொஞ்சம் குறைவு.

எனினும் உயரத்தில் ஒன்றும் இல்லை என்றும் சினிமாவில் ஜோடிகளுக்கு இடையே உயரத்தில் சிறிது வித்தியாசம் இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நடிகைகளில் உயரமாக இருக்கும் பிரபல நடிகை அனுஷ்கா சாதிக்க வில்லையா என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions