138 நிமிடங்கள் மட்டுமே ஓடும் தோசெய்

Bookmark and Share

138 நிமிடங்கள் மட்டுமே ஓடும் தோசெய்

இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் என்பது 150 நிமிடங்களுக்கு மேல் ஓடினால், மக்கள் பொறுமையாக இருந்து பார்ப்பார்களா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும்.

முன்பெல்லாம்  ஒரு திரைப்படம் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடும். அதையும் மக்கள் பொறுமையாக தியேட்டரில் அமர்ந்து பார்த்தார்கள். ஆனால் இன்றைய மக்கள் அவ்வளவு பெரிய படத்தை பார்க்க தயாராக இல்லை.

இன்றைய மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்த இயக்குனர்கள் 150 நிமிடங்களுக்கு அதிகமாக ஓடும் படங்களை எடுப்பது இல்லை. தற்போது பிரபல ஹீரோ நாக சைத்தன்யா நடிக்கும் தோசெய் படம் சுமார் 138 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய அளவில் எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளனர் என்று தான் கூற வேண்டும். இந்த படம் வரும் 24ம் தேதி உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் திரையிடப்படுகின்றது.

பிரபல ஹீரோவான நாக சைத்தன்யாவுக்கு 1 நேநோக்கடினே பட புகழ் நடிகையான கிரித்தி சனொன் ஜோடியாக நடிக்கிறார். சுவாமி ரா ரா என்ற வெற்றி படத்தை தந்த பிரபல இயக்குனர் சுதீர் வர்மா இந்த படத்தை இயக்கி உள்ளார்.

அவர் மீண்டும் ஒரு வெற்றி படத்தை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரபல இசை அமைப்பாளர் சன்னி எம் ஆர் இசை அமைத்துள்ளார். பிரபல தயாரிப்பாளரான பி வி எஸ் என் பிரசாத் தயாரித்துள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions