தோசெய் இயக்குனர் காட்டில் மழை...

Bookmark and Share

தோசெய் இயக்குனர் காட்டில் மழை...

சுவாமி ரா ரா மற்றும் தோசெய் போன்ற வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான சுதீர் வர்மா தற்போது ஒரு டிரெண்ட் செட்டர் என்று அழைக்கப்படுகிறார்.

அதாவது கிரைம் கதையில் காதலை அழகாக சொல்லி வெற்றி படத்தை எப்படி இயக்க முடியும் என்பதற்கு உதாரணமாக சுதீர் வர்மா திகழ்வதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சாதிக்க துடிக்கும் புதிய இளம் இயக்குனர்களில் பலர் இந்த பார்முலாவை பயன்படுத்த தயாராகி வருகின்றனர். இந்த இரண்டு படம் தந்த நம்பிக்கையும், நல்ல பெயரும் இயக்குனர் சுதீர் வர்மாவை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அதாவது அவர் தனது மூன்றாவது படத்தில் மிகப்பெரிய ஹீரோவுடன் இணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜாவை சந்தித்து கதை சொல்ல இருப்பதாக கூறப்படுகின்றது.

தோசெய் படத்தை பார்த்த பிரபல ஹீரோவான நாகர்ஜுனும் இயக்குனர் சுதீர் வர்மாவை பாராட்டி விட்டு, இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று கூறியுள்ளார். அதாவது சுதீர் வர்மாவிடம், நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை போனில் தொடர்பு கொள்ளலாம்.

என்னிடம் கதையை சொல்லலாம், நாகர்ஜுன் கூறியதாக தெரிகிறது. இதன் மூலம் சுதீர் வர்மா பிரபல ஹீரோவுடன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions