
இயக்குனர் ஆனைவாரி ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் தமிழ். இவர் டோனா என்ற பெயரில் இயக்கியுள்ள 6 நிமிட குறும் படம் பிரான்ஸ் சார்ட் பிலிம் கார்னரில் செலக்ட் ஆகியுள்ளது.
உலக அளவில் 3 ஆயிரம் குறும் படங்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், 300 படங்கள் செலக்ட் ஆகியுள்ளன. அதில் இந்தியாவில் இருந்து சென்ற குறும் படங்களில் தேர்வான 5 படங்களில் இந்த டோனாவும் ஒன்று.
இதுபற்றி அப்பட டைரக்டர் தமிழ் கூறும்போது,
இந்த டோனா குறும் படத்தை ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உள்ள ஈகோவை மையப்படுத்தி உருவாக்கினேன். அந்த பெண் நினைப்பதை பையன் செய்ய மாட்டான். பையன் நினைப்பதை பெண் செய்ய மாட்டாள். ஒரு கட்டத்தில் பையன் இறங்கி வருவான்.
ஆனால் அந்த பெண் இறங்கி வர மாட்டாள். இதுதான் அந்த 6 நிமிட கதையில் சொல்லப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்த படத்தில் டயலாக்கே கிடையாது. பார்ப்பது மற்றும் அவர்களது மூவ்மெண்ட், முக ரியாக்சன்தான் இந்த படம். அதோடு பின்னணி இசையும் கிடையாது. சவுண்ட் எப்க்ட்ஸ் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இதில், மல்லிகா, நித்தேஷ் நடித்துள்ளனர் என்று கூறும் தமிழ், இந்த படத்தை அடுத்தபடியாக தமிழில் முழுநீள திரைப்படமாகவும் இயக்க திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்.
Post your comment