தணிக்கையில் யு/ஏ பெற்ற டொங்கடா

Bookmark and Share

தணிக்கையில் யு/ஏ பெற்ற டொங்கடா

தெலுங்கு திரையின் வளர்ந்து வரும் நடிகையான லக்ஷ்மி மஞ்சுவின் நடிப்பில் உருவாகி வரும் டொங்கடா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் இசையமைப்பாளர் ரகு இசையில், அண்மையில் திரைக்கு வந்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் ஆள் கடத்தல் கும்பலினைச் சார்ந்த கதை என தெரிகின்றது.

லக்ஷ்மி மஞ்சுவுடன் அடிவி சேஷ் நடித்துள்ள இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராணா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தணிகைக்குச் சென்ற இப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இப்படம் மே 1 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகின்றது. இப்படத்தில் நடிகை லக்ஷ்மி மஞ்சு  பாடிய பெண்களின் உரிமைகள் குறித்த பாடல் பிரபலமடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions