“போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் படங்கள் அதிகமாக வருகின்றன” -மலையாள இயக்குனர் விரக்தி..!

Bookmark and Share

“போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் படங்கள் அதிகமாக வருகின்றன” -மலையாள இயக்குனர் விரக்தி..!

நாட்டில் நடப்பதைத்தான் சினிமாவில் காட்டுகிறோம் என்கிறார்கள் நம் இயக்குனர்கள்.. ஆனால் சினிமாவைப் பார்த்துத்தான் குற்றவாளிகளாக பலர் உருவாகிறார்கள் என்கிறார்கள் போலீஸார்.

கடந்த வருடம் கேரளாவில் நடந்த நிலாம்பூர் கொலைவழக்கில் கைதான இளைஞர்களை போலீஸார் விசாரித்தபோது 'த்ரிஷ்யம்' படம் தான் எங்களுக்கு கொலைசெய்யும் ஊக்கத்தை தந்தது என்று கூறியிருக்கிறார்கள்.  'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லால் ஒரு கொலையை சாதுர்யமாக மறைக்க முயற்சிகள் செய்வார்.

இதுமட்டுமல்ல.. இதே காலகட்டத்தில் வெளியான 'இடுக்கி கோல்டு', 'ஹனி பீ' ஆகிய படங்களை பார்த்துத்தான் தாங்கள் போதைப்பழக்கத்திற்கு ஆளானதாகவும் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆக, தற்போதைய மாறிவரும் இளைய சமுதாயம் சினிமாவில் இருந்து நல்லவற்றை எடுத்துக்கொள்வதைவிட மோசமானவற்றைத்தான் முதலில் கவனிக்கிறது.  

சமீபத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கிய நடிகர் டாம் சாக்கோ விவகாரத்தை கவனித்த, மூத்த இயக்குனரான சிபிமலயில் சில இயக்குனர்களை கடுமையாக சாடியிருக்கிறார்.

மனதில் பட்டதை பளிச்சென பேசிவிடும் நிஜ ஹீரோவான சிபிமலயில் “சில படங்கள் போதைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக தவறான மெசேஜை இளைஞர்களிடம் பரப்புகின்றன.

அப்படிப்பட்ட படங்கள் மிகவும் உண்மையான திறமையை சிதைத்துவிடும் ஆபத்தானது என்பதுமட்டுமல்ல நாளடைவில் சினிமாவையே அழித்துவிடும்” என்றும் எச்சரித்திருக்கிறார்.

கதைக்கு சுவராஸ்யம் தரும் என்று இயக்குனர்கள் படத்தில் சேர்க்கும் பல விஷயங்கள் நிஜ வாழ்க்கையில் பலரால் பல குற்றங்களுக்காக துணைபோகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. 


Post your comment





Related News
திருமணம் செய்து கொள்ள ஆசை: நடிகை தபு
4 மொழிகளில் கலக்கிய திரிஷ்யத்துக்கு இந்தியில் ரசிகர்கள் ஆதரவு இல்லை
திரிஷ்யம் வெற்றி இந்தியிலும் தொடருமா?
பாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஸ்ரீ தத்தாவின் தங்கை
த்ரிஷ்யம் டிரைலர் நாளை வெளியீடு
த்ரிஷ்யத்திற்காக பின்வாங்கிய டாம் குரூஸ்
த்ரிஷ்யம் : தபு லுக் வெளியீடு
தேசிய விருது வென்ற 10 கலைஞர்களின் சங்கமத்தில் த்ரிஷ்யம் இந்தி ரீமேக்
த்ரிஷ்யம் சூட்டிங் நிறைவு செய்த அஜய்
கரடியாக நடிக்க வந்தவர் மோகன்லாலுக்கு வில்லனான கதை தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions