4 மொழிகளில் கலக்கிய திரிஷ்யத்துக்கு இந்தியில் ரசிகர்கள் ஆதரவு இல்லை

Bookmark and Share

4 மொழிகளில் கலக்கிய திரிஷ்யத்துக்கு இந்தியில் ரசிகர்கள் ஆதரவு இல்லை

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை தொட்ட ‘திரிஷ்யம்’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் மீண்டும் தயாராகி திரைக்கு வந்து நன்றாக ஓடியது. இதையடுத்து இந்தியிலும், ‘திரிஷ்யம்’ படம் ரீமேக் செய்யப்பட்டு கடந்த வாரம் வெளியானது. 

இதில் அஜய்தேவ்கான், ஸ்ரேயா, தபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 4 தென்னக மொழிகளில் வெற்றி வாகை சூடிய திரிஷ்யம் இந்தியில் எதிர்பார்த்த அளவு ரசிகர்களின் ஆதரவை பெறவில்லை. 

கதாநாயகனாக வரும் அஜய்தேவ்கான் படத்துடன் ஒன்றி நடிக்கவில்லை. படத்தில் வரும் காட்சிகள் ஆடம்பரமாக இருக்கின்றன. அஜய் தேவ்கான் முதல் மகளை தத்து எடுப்பதாக கதையை மாற்றி இருக்கிறார்கள். சில காட்சிகள் இந்தி படபாணியில் மாற்றப்பட்டுள்ளன. எனவே, படம் ரசிகர்களை கவரவில்லை என்று கூறப்படுகிறது. 

நடிகை தபு போலீஸ் ஐ.ஜி.யாக வந்து அசத்தினார். அவருக்காகத்தான் படம் ஓரளவு ஓடுகிறது என்று இந்திப் பட உலகினர் சொல்கிறார்கள். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பு யதார்த்தமாக இருந்தது.

தமிழில் கமல் அசத்தினார். ஆனால் இந்தியில் நடித்த அஜய்தேவ்கான் அந்த அளவுக்கு சிரமம் எடுத்து நடிக்காததாலும் காட்சி மாற்றங்களாலும் எதிர்பார்த்த ‘ரிசல்ட்’ கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
திருமணம் செய்து கொள்ள ஆசை: நடிகை தபு
திரிஷ்யம் வெற்றி இந்தியிலும் தொடருமா?
பாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஸ்ரீ தத்தாவின் தங்கை
த்ரிஷ்யம் டிரைலர் நாளை வெளியீடு
த்ரிஷ்யத்திற்காக பின்வாங்கிய டாம் குரூஸ்
த்ரிஷ்யம் : தபு லுக் வெளியீடு
தேசிய விருது வென்ற 10 கலைஞர்களின் சங்கமத்தில் த்ரிஷ்யம் இந்தி ரீமேக்
த்ரிஷ்யம் சூட்டிங் நிறைவு செய்த அஜய்
கரடியாக நடிக்க வந்தவர் மோகன்லாலுக்கு வில்லனான கதை தெரியுமா..?
“போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் படங்கள் அதிகமாக வருகின்றன” -மலையாள இயக்குனர் விரக்தி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions