திரிஷ்யம் வெற்றி இந்தியிலும் தொடருமா?

Bookmark and Share

திரிஷ்யம் வெற்றி இந்தியிலும் தொடருமா?

மலையாளத்தில் மோகன் லால், மீனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை அடைந்த திரில்லர் திரைப்படம் 'திரிஷ்யம்'. இதன் வெற்றியைத் தொடர்ந்து கன்னடத்தில் 'திரிஷ்யா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி அதிலும் வெற்றியடைந்தது. நடிகர் வெங்கடேஷ், மீனா நடிப்பில் தெலுங்கில் 'திருஷ்யம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. 

இப்படம் தமிழிலும் 'பாபநாசம்' என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்தது. கமல்ஹாசன், கெளதமி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே இயக்கியிருந்தார். திரைக்கதையில் சின்ன மாற்றத்துடன் வெளியிடப்பட்ட இந்தப் படம் தமிழிலும் சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தமிழ் பதிப்பின் வசூல், மலையாளத்தின் வசூலையும் மிஞ்சியது. 

தென்னிந்தியாவைக் கலக்கிய இந்தப்படம் இந்தியில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன், ஷ்ரேயா சரண், தபு ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டு இன்று வெளிவந்துள்ளது.

இதில் தபு போலீஸ் கதாபத்திரத்தில் தோன்றியிருக்கிறார். சிறப்புக் காட்சியில் படத்தை பார்த்த விமர்சகர்கள் திரில்லருக்கான எல்லா சாராம்சங்களும் நிறைந்த படம் என புகழாரம் சூட்டியுள்ளனர். இந்தப் படம் இந்தியிலும் மக்களின் வரவேற்பை பெறும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
திருமணம் செய்து கொள்ள ஆசை: நடிகை தபு
4 மொழிகளில் கலக்கிய திரிஷ்யத்துக்கு இந்தியில் ரசிகர்கள் ஆதரவு இல்லை
பாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஸ்ரீ தத்தாவின் தங்கை
த்ரிஷ்யம் டிரைலர் நாளை வெளியீடு
த்ரிஷ்யத்திற்காக பின்வாங்கிய டாம் குரூஸ்
த்ரிஷ்யம் : தபு லுக் வெளியீடு
தேசிய விருது வென்ற 10 கலைஞர்களின் சங்கமத்தில் த்ரிஷ்யம் இந்தி ரீமேக்
த்ரிஷ்யம் சூட்டிங் நிறைவு செய்த அஜய்
கரடியாக நடிக்க வந்தவர் மோகன்லாலுக்கு வில்லனான கதை தெரியுமா..?
“போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் படங்கள் அதிகமாக வருகின்றன” -மலையாள இயக்குனர் விரக்தி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions