கரடியாக நடிக்க வந்தவர் மோகன்லாலுக்கு வில்லனான கதை தெரியுமா..?

Bookmark and Share

கரடியாக நடிக்க வந்தவர் மோகன்லாலுக்கு வில்லனான கதை தெரியுமா..?

மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டான 'த்ரிஷ்யம்' படத்தை பொறுத்தவரை அதில் மிக முக்கியமான இரண்டு கதாபாத்திரங்கள் மோகன்லாலை மட்டுமல்ல நம்மையும் சேர்ந்து மிரட்டுவார்கள்.

ஒன்று அசிஸ்டண்ட் கமிஷனராக நடித்திருந்த ஆஷா சரத்.. இன்னொருவர் எஸ்.ஐ ஆக நடித்த கலாபவன் சாஜன். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை மானசீகமாக டார்ச்சர் செய்யும் வில்லனாக, கான்ஸ்டபிள் சகாதேவனாக கலாபவன் சாஜன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதுநாள் வரை துண்டு துக்கடா ரோல்களில் நடித்துவந்த சாஜனுக்கு இந்தப்படம் தான் புகழ் வெளிச்சம் பாய்ச்சியது. ஆனால் சாஜன் இந்த நிலைக்கு வர பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.. இவர் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிய காலத்தில் 1999ல் 'மை டியர் கரடி' என்கிற படத்தில் கரடியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

அதுதான் இவரது முதல் சினிமா வாய்ப்பு. படத்தில் ஹீரோவாக நடித்த கலாபாவன் மணி, கரடியாக மாறவேண்டிய சூழல் ஏற்படும். அந்த கரடி கதாபாத்திரத்தை டூப் போட்டு நடித்தவர் தான் இந்த கலாபவன் ஷாஜன். இப்போது முன்னணி ஹீரோக்களுடன் காமெடி நண்பராக வலம் வர ஆரம்பித்திருக்கிறார் சாஜன். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions