பக்திமானாக மாறிய ட்ரம்ஸ் சிவமணி!

Bookmark and Share

பக்திமானாக மாறிய ட்ரம்ஸ் சிவமணி!

இந்தியாவிலுள்ள அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களிடமும் ட்ரம்ஸ் வாசித்து வருபவர் சிவமணி. இவர் பல இசை ஆல்பங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

மேலும், அரிமா நம்பி என்ற படத்துக்கு இசையமைத்துள்ள ட்ரம்ஸ் சிவமணி, தற்போது கணிதன், அமளி துமளி போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

மேலும், இந்த சிவமணி நிஜத்தில் பெரிய பக்திமான். குறிப்பாக, சென்னை வடபழனியில் உள்ள பரஞ்சோதி பாபா என்கிற ஒரு சித்தர் சாமியை இவர் வணங்கி விட்டு சென்ற பிறகுதான் இவருக்கு முதல் ஆல்பத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பே கிடைத்ததாம்.

அதனால் அந்த பாபாவின் மீது அதிக பக்தி கொண்டவராக மாறி விட்டார் சிவமணி. அதன்காரணமாக தான் எந்த முக்கிய நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அந்த பாபாவின் சன்னதிக்கு சென்று வணங்கிவிட்டுதான் செல்கிறார் சிவமணி.

அதோடு, இப்போது அந்த பாபா சன்னதியின் அறக்கட்டளை தலைவராக செயல்பட்டு வரும் சிவமணி, தனது சினிமா வட்டார நண்பர்களிடமும் தனக்கு அந்த பரஞ்சோதி பாபாவை வணங்கிய பிறகுதான் திருப்புமுனை ஏற்பட்டதாகவும் தனது அனுபவத்தை கூறி வருகிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions