“புதியவர்களின் வரவால் எனக்கு பாதிப்பில்லை” - பிருத்விராஜ்...!

Bookmark and Share

“புதியவர்களின் வரவால் எனக்கு பாதிப்பில்லை” - பிருத்விராஜ்...!

மலையாள திரையுலகில் கடந்த நான்கு வருடங்களில் புதுப்புது ஹீரோக்கள் வந்துவிட்டனர். அவர்களில் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின்பாலி மூவரும் முன்னணி இளம் நடிகர்களாக தங்களுக்கென ஒரு இடத்தையும் பிடித்துள்ளனர்..

ஆனால் எத்தனை புதியவர்கள் வந்தாலும் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல தனக்கான இடத்தை கடந்த பத்து வருடங்களாக சிரமமின்றி பாதுகாத்து வருகிறார் பிருத்விராஜ். காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும், இவருக்கு மட்டும் எங்கிருந்து இப்படி கதைகள் கிடைக்கின்றன என சக நடிகர்களை ஆச்சர்யப்பட வைக்கவே செய்கின்றன.

“பதினெட்டு வயதில் நடிக்க வந்தேன்.. இப்போது 13 வருடங்கள் கடந்துவிட்டன... எனக்கு 32 வயதுதான் ஆகிறது. அதனால் புதியவர்கள் வரவினாலோ அல்லது புது ட்ரெண்டினாலோ எனக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்கிறார் பிருத்விராஜ்.

இவருக்கென பார்ட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு நட்பு வட்டாரம் இல்லையென்றாலும், அனைத்து இயக்குனர், நடிகர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறார். ஆனாலும் இவர் சினிமா பற்றிய விஷயங்களை அதிகம் பகிர்ந்துகொள்வது அவருடைய அண்ணனும் நடிகருமான இந்திரஜித்துடன் தான்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'இவிடே' படமும் இவரது வித்தியாசமான நடிப்பால் பேசப்படும் படமாக மாறியிருக்கிறது.


Post your comment





Related News
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
பிரபல நடிகைகளுடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான், ரசிகர்கள் உற்சாகம்
விக்ரம் இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions