தமிழில் ரீமேக் ஆகும் துல்கர் படம்!

Bookmark and Share

தமிழில் ரீமேக் ஆகும் துல்கர் படம்!

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் சார்லி. வித்தியாசமான கதைகளத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ட்டின் பிரகட் இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக பார்வதி நடித்துள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions