மீண்டும் தமிழில் நடிக்கும் துல்கர் சல்மான்!

Bookmark and Share

மீண்டும் தமிழில் நடிக்கும் துல்கர் சல்மான்!

மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் தமிழில் வாயை மூடி பேசவும், மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி ஆகிய படங்களில் நடித்தார். 

வாயை மூடி பேசவும் சூப்பர் ப்ளாப் ஆனாலும், ஓ காதல் கண்மணி படம் சூப்பர்ஹிட்டானது. இவ்விரு படங்கள் மூலம் தமிழக ரசிகர்களையும் கவர்ந்துள்ள துல்கர் சல்மான் தமிழில் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.

ஆனால் மலையாளத்தில் பிஸியாக இருப்பதால் தமிழில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்று சொல்லி வந்தார்.  இந்நிலையில் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை அம்புலி 3டி மற்றும் ஆ படங்களை இயக்கிய ஹரி சங்கர், ஹரி நாராயணன் என்ற இரட்டையர்கள் இயக்கவுள்ளனர். இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions