மலையாள சினிமாவின் நான்கு ரேஸ் குதிரைகள்..!

Bookmark and Share

மலையாள சினிமாவின் நான்கு ரேஸ் குதிரைகள்..!

ஸ்டார் வேல்யூவிற்காக மோகன்லால், மம்முட்டி படங்களை தயாரிப்பவர்கள் அந்த கௌரவத்திற்காகவே மிகப்பெரிய விலையை கொடுக்கிறார்கள்.. சில நேரங்களில் லாபத்தையும் அள்ளுகிறார்கள்.

ஆனால் போட்ட அசலுடன் கணிசமான லாபத்தையும் சிந்தாமல் சிதறாமல் எடுக்கும் ரேஸ் குதிரைகள் என மலையாள சினிமா நான்கே நான்கு நட்சத்திரங்களைத்தான் நம்புகிறது. பிருத்விராஜ், துல்கர் சல்மான், நிவின்பாலி, பஹத் பாசில் ஆகியோர் தான் அந்த நான்கு பேரும்..

இதில் பஹத் பாசிலின் படங்கள் தற்போது தோல்வியை தழுவி வந்தாலும் அவர் எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் டக்கென எழுந்து ஓடும் ரேஸ் குதிரை தான் என்கிறது விநியோகஸ்தர் தரப்பு.

இவர்களது படங்களை தயாரிக்க ஐந்து கோடிகளுக்குள் தான் செலவாகிறது என்பது ஆச்சர்யம். அதேசமயம் சாட்டிலைட் ரைட்ஸுடன் கௌரவமான தியேட்டர் கலெக்சனும் கைக்கு வந்துவிடுவதால் இந்த நால்வரின் பின்னால் தான் இப்போது தயாரிப்பாளர் கூட்டம் சுற்றி வருகிறது.

 


Post your comment





Related News
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
பிரபல நடிகைகளுடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான், ரசிகர்கள் உற்சாகம்
விக்ரம் இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions