துல்கர்சல்மானுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

Bookmark and Share

துல்கர்சல்மானுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

2012ல் செகண்ட் ஷோ என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் துல்கர்சல்மான். அந்த வகையில், மூன்றே ஆண்டில் 15 படங்களில் அவர் நடித்து விட்டார். அதில் தமிழில் இரண்டு படங்கள். ஒன்று வாய் மூடி பேசவும்.

இன்னொன்று ஓ காதல் கண்மணி. துல்கர்சல்மானுக்கு மலையாளத்தில் இருக்கும் ரசிகர்களை மனதில் கொண்டு அவரை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் மணிரத்னம்.

இந்த படம் தனது கேரியரில் முக்கியமான படம் என்பதால், கடந்த 6 மாதங்களாக வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இப்படத்தில் நடித்து முடித்து விட்ட துல்கர்சல்மான், வருகிற 17-ந்தேதி ஓ காதல் கண்மணி திரைக்கு வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,

நான் சென்னையில்தான் படித்தேன். அதனால் மணிரத்னம் இயக்கிய படங்கள் திரைக்கு வரும்போது ஒரு ரசிகனாய் தியேட்டர்களைத் தேடி ஓடிய நாட்கள் இப்போதும் என் கண்முன்னே தோன்றுகின்றன.

அப்படிப்பட்ட மணிரத்னத்தின் படத்தில் இப்போது நானே நடித்திருக்கிறேன் என்பது பிரமிப்பாக உள்ளது.  படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு, படத்திற்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மேலும், இந்த படம் வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. அன்றைய தினம் எனது தங்கையின் பிறந்த நாளும்கூட. அதனால் அந்த நாள் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கப்போகிறது என்கிறார் துல்கர்சல்மான்.


Post your comment





Related News
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
பிரபல நடிகைகளுடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான், ரசிகர்கள் உற்சாகம்
விக்ரம் இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions