கதை கேட்காமலே நடிக்க சம்மதித்தேன் - துல்கர் சல்மான்

Bookmark and Share

கதை கேட்காமலே நடிக்க சம்மதித்தேன் - துல்கர் சல்மான்

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'ஓ காதல் கண்மணி' பலரின் பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தைத் தொட்டிருக்கிறது. இந்தப் படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான 'வாயை மூடிப் பேசவும்' மிகப் பெரிய தோல்விப் படமாக அமைந்து தமிழில் நல்ல அறிமுகத்தைக் கொடுக்காமல் போய்விட்டது.

நல்ல வேளை இரண்டாவது படமே மணிரத்னம் இயக்கத்தில் அமைந்து விட்டதால் ஒரு நல்ல வெற்றியுடன் தப்பித்து விட்டார். 'ஓ காதல் கண்மணி' படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் துல்கர் கூறியிருப்பதாவது, “இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு முன் நான் கதை கேட்கவேயில்லை.

ஆனால், மணிரத்னம் சார் என்னை சந்தித்த போது முழு கதையையும் சொன்னார். இந்தப் படத்தில் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது, நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

என்னைப் போன்ற வளரும் நடிகர்களுக்கு மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது ஒரு கனவு.என்னுடைய அப்பா மனதளவில் மிகவும் இளமையானவர். என்னுடைய படங்களைப் பார்த்து அவர் இதுவரை எதுவுமே சொன்னதில்லை.

ஆனால், 'ஓ காதல் கண்மணி' படத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். என்னுடைய நடிப்பைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். மணிரத்னம் அவர்களின் இயக்கம் அப்பாவை வெகுவாகக் கவர்ந்த ஒன்று. இப்போதைக்கு என்னுடைய கவனம் முழுவதும் மலையாளப் படத்தில்தான் இருக்கிறது.

தமிழில் நல்ல கதைகள் வந்தால் நடிப்பேன். மற்ற மொழிகளில் நடிக்கும் போது அந்தந்த மொழியைத் தெரிந்து நடித்தால்தான் நல்லது,” என துல்கர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
பிரபல நடிகைகளுடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான், ரசிகர்கள் உற்சாகம்
விக்ரம் இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions