இவங்களுக்குள்ள இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா: வியக்க வைக்கும் ஓகேகே

Bookmark and Share

இவங்களுக்குள்ள இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா: வியக்க வைக்கும் ஓகேகே

ஓகே கண்மணி படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் இடையே இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா என்று பலரும் வியக்கிறார்கள். தொடர் தோல்விகளை சந்தித்துள்ள மணிரத்னம் இயக்கியுள்ள படம் தான் ஓகே கண்மணி.

துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து அழகிய காதல் கதையை தனக்கே உரிய பாணியில் கையாண்டுள்ளார். இந்த படம் நிச்சியம் வெற்றி பெற்று தனது கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாக அமையும் என மணிரத்னம் நம்புகிறார்.

படத்தில் வரும் மென்டல் மனதில் பாடல் டீஸர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ரஹ்மானின் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் வரும் 27ம் தேதி வெளியாகிறது.

பாடல்களை கேட்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஓகே கண்மணி படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் இடையே இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா என்று ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் மணி.

படத்தின் ட்ரெய்லரை பார்க்கையில் நமக்கு அலைபாயுதே மாதவன், ஷாலினி நினைவுக்கு வருகிறார்கள்.மென்மையான காதல் கதையை கையில் எடுத்துள்ளார் மணி. இந்த படத்தை அலைபாயுதே படத்தின் இரண்டாம் பாகம் எனலாம் என்று ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

ஓகே கண்மணி தெலுங்கில் ஓகே பங்காரம் என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்படுகிறது. படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ரிலீஸாக உள்ளது.ஏப்ரல் மாதம் பல தமிழ் படங்கள் ரிலீஸாக உள்ளன. அந்த ரேஸில் ஓகே கண்மணியும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
பிரபல நடிகைகளுடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான், ரசிகர்கள் உற்சாகம்
விக்ரம் இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions