டான்சராக நடிக்கிறார் துல்கர் சல்மான்..!

Bookmark and Share

டான்சராக நடிக்கிறார் துல்கர் சல்மான்..!

அமல் நீரத் மலையாள சினிமாவில் அருமையான ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, திறமையான இயக்குனரும் கூட. அதனால் தான் மலையாளத்தில் நடிக்கலாமா என்று யோசித்த பிரகாஷ்ராஜே கூட இவர் இயக்கிய 'அன்வர்' படத்தில் நடித்துக்கொடுத்தார்.

சில மாதங்களுக்கு முன் இவர் இயக்கத்தில் வெளியான 'அயூப்பிண்டே புஸ்தகம்' பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது.  மம்முட்டியை வைத்து 'பிக் பி' படம் மூலம் இயக்குனராக மாறிய அமல் நீரத், இப்போது துல்கர் சல்மானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போகிறார்.

அப்படியானால் மம்முட்டியையும், பிருத்விராஜையும் வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் 'குஞ்சாலி மரைக்காயர்' வரலாற்றை அமல் நீரத் படமாக்கப்போவதாக வந்த செய்தி உண்மையில்லையா..? உண்மையோ, பொய்யோ.. இப்போதைக்கு அதை தள்ளிவைத்துவிட்டு துல்கர் படத்தை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

ஏற்கனவே 'அஞ்சு சுந்தரிகள்' என்கிற ஆந்தாலாஜி படத்தின் (குறும்படங்களை ஒருங்கிணைத்த படம்) ஐந்து எபிசோடுகளில் 'குள்ளண்டே பார்யா' என்கிற குறும்படத்தில் துல்கரை வைத்து இயக்கியிருந்தார் அமல் நீரத்.

இப்போது முழு நீளப்படமாகவே இயக்கவுள்ளார். இந்தப்படத்தில் துல்கர் சல்மான் டான்சராக நடிக்க இருக்கிறார். இதுவரை துல்கர் நடித்த படங்கள் எதிலும் அவர் அவ்வளவாக டான்ஸ் ஆடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions