துல்கர் சல்மானை மிஞ்சும் பவர்புல்லான ஹீரோயினை தேடும் இயக்குனர்..!

Bookmark and Share

துல்கர் சல்மானை மிஞ்சும் பவர்புல்லான ஹீரோயினை தேடும் இயக்குனர்..!

ஒரு படத்தில் இரண்டு க்ளைமாக்ஸ் வைத்து ரசிகர்களை பரவசம் மற்றும் ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கும் இயக்குனர்கள் வெகு சில பேர் தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் மலையாள இயக்குனர் மார்டின் பரக்கத். க்ளைமாக்ஸ் முடிந்து கிளம்பலாம் என ஆடியன்ஸ் எழுந்திருக்கும்போது 'அட' என ஆச்சர்யப்படும்படி க்ளைமாக்ஸை மாற்றுவதில் வல்லவர்.

மம்முட்டியை வைத்து இவர் இயக்கிய 'பெஸ்ட் பிரண்ட்ஸ்' படம் அதன் க்ளைமாக்ஸ் உத்திக்காகவே பாராட்டப்பட்டது. இந்த மார்ட்டின் தான் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானையும் வைத்து 'ஏபிசிடி' என்கிற படத்தையும் இயக்கினார்.  

அமெரிக்காவில் ஜாலியாக சுற்றி தெரியும் துல்கரையும் அவரது சித்தி பையனையும் பொறுப்பு வரட்டும் என்பதற்காக கேரளாவுக்கு படிக்க அனுப்பி வைப்பார் அவரது தந்தை. ஆனால் இந்த ஊரின் நடைமுறைகள் ஒத்துவராமல், கையில் இருந்த காசும் செலவழிந்த நிலையில் எப்படியாவது மீண்டும் அமெரிக்கா செல்ல திட்டம் போடுவார்கள் இந்த இருவரும்.

இவர்களுக்கு கல்லூரியில் உடன் படிக்கும் மாணவியான அபர்ணா கோபிநாத் உதவி செய்வார். காசு இல்லாமல் இவர்கள் படும் பாடு எல்லாம் சிக்கனம் என்கிற பெயரில் இவர்களை பேமஸ் ஆக்குவதோடு உள்ளூர் அமைச்சரையும் பகையாளி ஆக்கும்.

இந்த இருவர் பிரச்சனைக்கும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டால் ’அடடே’ என தீர்ப்பு சொல்லியிருப்பார் மார்டின் பரக்கத்.இப்போது முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.. இந்த ஏபிசிடி குரூப் மீண்டும் புதிய படத்தில் இணைகிறது.

பெரும்பாலான படங்களில் தனது கெட்டப்பை பற்றி கவலைப்படாமல் பாப்கட்டிங் தலையுடன் ஒரு ஆண் போலவே மிடுக்குடன் நடிக்கும் அபர்ணா கோபிநாத் இந்தப்படத்தில் மீண்டும் துல்கருடன் இணைந்து நடிக்கிறார்.

ஆனால் கதாநாயகி இவரல்ல.. அதற்குத்தான் புதியமுகமாக ஒருவரை தேடி வருகிறார் இயக்குனர் மார்டின்.. கிட்டத்தட்ட படத்தின் அனைத்து காட்சிகளிலும் இடம்பெறும் கதாநாயகிக்கு, நாயகன் துல்கரை விட முக்கியத்துவமான வேடமாம். மே மாதம் 10ஆம் தேதி படப்பிடிப்பை துவக்க இருக்கிறார்களாம்.


Post your comment





Related News
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!
மெகா ஹிட் நடிகரின் படத்தில் ரக்ஷன் - யார் தெரியுமா?
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!
வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions