பெங்களூர் டேய்ஸ் கொண்டாட்டத்தில் துல்கர், நிவின் பாலி..!

Bookmark and Share

பெங்களூர் டேய்ஸ் கொண்டாட்டத்தில் துல்கர், நிவின் பாலி..!

மலையாளத்தின் இளம் முன்னணி ஹீரோக்களான ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை வைத்து அஞ்சலி மேனன் இயக்கத்தில் கடந்த வருடம் மே மாதம் வெளியான 'பெங்களூரு டேய்ஸ்' படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது வரலாறு. அதன் சக்சஸ் பார்ட்டியை இப்போது நடத்தியிருக்கிறார் படத்தின் இயக்குனரான அஞ்சலி மேனன்.  

இப்போது போய் சக்சஸ் பார்ட்டி கொண்டாடியிருக்கிறார்களே என நினைக்கவேண்டாம்.. அதிரிபுதிரியாக வெற்றிபெற்ற படத்திற்கு எப்போதுமே வெற்றி விழா கொண்டாடும் தகுதி வந்துவிடுகிறதே.

இந்த கொண்டாட்டத்தில் துல்கர் நிவின் பாலி இருவர் மட்டுமே கலந்துகொண்டார்கள். பஹத் பாசில், நஸ்ரியா, பார்வதி, நித்யா மேனன், இஷா தல்வார் அனைவரும் விழாவில் ஆப்சென்ட்.. ஆச்சர்யமாக துல்கரின் தந்தை மம்முட்டியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

'பெங்களூர் டேய்ஸ்' டீமை நீண்ட நாட்கள் கழித்து மறுபடியும் அதன் சக்சஸ் பார்ட்டியில் ஒன்று கூட வைத்ததற்காக இயக்குனர் அஞ்சலி மேனனுக்கும், படத்தின் தயாரிப்பாளரும் பிரபல இயக்குனருமான அன்வர் ரஷீத்துக்கும் நன்றி கூறியுள்ளார் துல்கர் சல்மான்.


Post your comment





Related News
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் 3 நாள் வசூல் நிலவரம் இதோ.!
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
பிரபல நடிகைகளுடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான், ரசிகர்கள் உற்சாகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions