நடிகர் துனியா விஜய் கைதாகி ஜாமீனில் விடுதலை

Bookmark and Share

நடிகர் துனியா விஜய் கைதாகி ஜாமீனில் விடுதலை

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் துனியா விஜய். கன்னட திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வருபவர் சுந்தர். இவர் துனியா விஜய் நடிக்கும் ‘மாஸ்திகுடி‘ படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ராமநகர் மாவட்டம் திப்பகொண்டனஹள்ளியில் ஏரியில் நடந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்து வில்லன் நடிகர்கள் 2 பேர் இறந்து போனதால் சுந்தரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சுந்தரின் சகோதரர் சங்கர். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள். சங்கரின் மனைவி மானசா.

சுந்தர் மற்றும் சங்கர் ஆகியோர் தங்களின் குடும்பத்துடன் சி.கே.அச்சுக்கட்டு பகுதியில் வசித்து வருகிறார்கள். சங்கர்-மானசா ஆகியோருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் முடிந்தது. இந்த நிலையில், மானசாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சங்கர் அவருக்கு தொல்லை கொடுப்பதாக மானசாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று காலையில் மானசாவை பார்க்க அவருடைய தந்தை ஜெயராம் தனது உறவினருடன் சங்கரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஜெயராமுக்கும், சங்கருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவம் குறித்து சங்கர், நடிகர் துனியா விஜயை தொடர்பு கொண்டு கூறியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து துனியா விஜய், சங்கரின் வீட்டுக்கு வந்து, ஜெயராமிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறின்போது ஜெயராமை, துனியா விஜய் தாக்கியதாக தெரிகிறது. இதனால், ஜெயராம் கையில் காயம் அடைந்தார்.
இதையடுத்து, அவர் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே, தாக்குதல் குறித்து துனியா விஜய்க்கு எதிராக ஜெயராம் சார்பில் சி.கே.அச்சுக்கட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீசார் ஜெயராமிடம் விசாரணை நடத்தி துனியா விஜய்க்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், சி.கே.அச்சுக்கட்டு பகுதியில் உள்ள தயாரிப்பாளர் சுந்தரின் வீட்டில் துனியா விஜய் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் துனியா விஜயை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி கைது செய்தனர்.

இருப்பினும், போலீஸ் நிலையத்திலேயே வழங்கப்படும் ஜாமீன் அடுத்த சிறிது நேரத்திலேயே துனியா விஜய்க்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக, கைதான துனியா விஜய் ஜாமீனில் விடுதலை ஆனார். ஆனாலும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று துனியா விஜயை போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து சி.கே.அச்சுக்கட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டை நடிகர் துனியா விஜய் மறுத்துள்ளார். நண்பரின் மாமனாரை தாக்கியதாக நடிகர் துனியா விஜய் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சம்பவம் நேற்று கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


Post your comment





Related News
இன்று விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் படக்குழுவினரின் ஒரு ஸ்பெஷல்
விஜய் பிறந்தநாளில் சாதனை செய்த அஜித்! என்ன ஸ்பெஷல்
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?
இளையதளபதி விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
விஜய்யின் மெர்சல் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி- படத்தில் இணைந்த பிரபல நாயகி
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
ஒரு நாளில் இத்தனை ட்வீட்டா? மெர்சல் பற்றி ட்விட்டர் நிறுவனம் அதிரடி தகவல்
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions