900 திரையரங்குகளில் வெளியான டைனமைட்

Bookmark and Share

900 திரையரங்குகளில் வெளியான டைனமைட்

டோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் மஞ்சு விஷ்ணு நடிப்பில் உருவாகியுள்ள டைனமைட் திரைப்படம் நாளை (செப்டம்பர் 4) உலகம் முழுவதும் திரைக்கு வருகின்றது.

தமிழில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் நடிகை ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த அரிமா நம்பி திரைப்படம் தெலுங்கில் டைனமைட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் தேவ கட்டா இயக்கிய இப்படத்தில் நடிகை பிரணிதா சுபாஸ் நாயகியாக நடிக்கின்றார்.

நடிகர் சக்ரவர்த்தி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

உலகம் முழுவதும் 900 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. நிசாமில் மட்டும் 210-த்திற்கும் அதிகமான திரையரங்குகளில் டைனமைட் திரைப்படம் வெளிவரவுள்ளது.

மஞ்சு விஷ்ணுவின் திரைப்படம் உலகம் முழுவதும் இத்தனை திரையரங்குகளில் வெளிவருவது இதுவே முதன்முறையாகும்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions