`காலா' ரஜினிக்கு மனைவியாகும் ஈஸ்வரி?

Bookmark and Share

`காலா' ரஜினிக்கு மனைவியாகும் ஈஸ்வரி?

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் `காலா'. படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து `காலா' குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.

அந்த வகையில் ரஜினியின் முக்கிய வில்லனாக நானா படேகர், அரசியல்வாதி கெட்டப்பில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஹூமா குரோஷி நடிக்க இருப்பதாக முன்னதாக கூறப்பட்டது.

ஆனால் `காலா' படத்தில் கரிகாலனின் மனைவியாக 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஈஸ்வரி ராவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாறாக ஹூமா குரோஷி, படத்தில் ரஜினியின் தோழியாகவோ அல்லது காதலியாகவோ வரலாம் என்றும் கிசு கிசுக்கப்படுகின்றன.

மற்றொரு நாயகியான அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சம்பத், பங்கஜ் த்ரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினி, ஜுன் 24-ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் இணைகிறார். 


Post your comment





Related News
காலா டீஸர் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ் - புகைப்படம் உள்ளே.!
கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுங்கள்- நடிகர் விவேக்
ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
ரஜினிக்கு எதிராக களமிறங்கும் 2 முன்னணி ஹீரோக்கள்
அனைவரும் எதிர்பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா ரிலீஸ் தேதி இதோ!
விக்ரமின் ஸ்கெட்ச் படம் பற்றி சூப்பர் ஸ்டார் வெளியிட்ட அதிரடி கருத்து.!
பாஷா-2 அஜித் சாருக்கு தான் சரி வரும் - பிரபல காமெடி நடிகர் அதிரடி பேட்டி.!
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
மலேசியாவில் பரவசமானேன் தேவிஸ்ரீபிரசாத்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions