எடிட்டர் லெனின் இயக்கியுள்ள விருது படம்!

Bookmark and Share

எடிட்டர் லெனின் இயக்கியுள்ள விருது படம்!

தமிழ் சினிமாவின் முக்கிய எடிட்டர்களில் லெனின் குறிப்பிடத்தக்கவர். 1979ல் மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் படத்தில் எடிட்டராக அறிமுகமான அவர், பூட்டாத பூட்டுக்கள், மெட்டி என தனது கேரியரை தொடங்கியவர், தெலுங்கு, மலையாளத்திலும் ஏராளமான படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

அதோடு, பல படங்களை அவர் இயக்கியும் இருக்கிறார். நதியைத்தேடி வந்த கடல், பண்ணைப்புரத்து பாண்டவர்கள், சொல்லத்துடிக்குது மனசு, நாக் அவுட், ஊருக்கு நூறு பேர் போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார்.

இதில் கார்த்திக் நடித்த சொல்லத்துடிக்குது மனசு படத்தை மட்டுமே கமர்சியல் கதையில் இயக்கியிருந்தார். மற்றதெல்லாம் விருதுக்கான படங்கள்தான். இந்த நிலையில், தற்போது அவர் முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு இசை சம்பந்தமான படத்தை இயக்கியுள்ளார்.

பறை இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகியுள்ள இப்படத்துக்கு கண்டதை சொல்கிறேன் என்று அவர் டைட்டில் வைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தையும் கமர்சியலாக இல்லாமல் விருதுக்காகவே இயக்கியிருக்கிறாராம் லெனின்.


Post your comment





Related News
நான் அப்படி சொல்லல - மெர்சல் சர்ச்சை குறித்து எடிட்டர் ரூபன் ஓபன் டாக்.!
அதுக்கென்னங்கண்ணா படம் தான் முக்கியம் - பைரவா எடிட்டரை அசர வைத்த விஜய்
தேசிய விருது பெற்ற வெற்றிக் கூட்டணி பிரிந்தது..!
கிங்காங் மற்றும் பெல்லோஷிப் ஆஸ்கார் விருது பெற்ற கலைஞர் ஹாப்கின்ஸ் விபத்தில் பலி!
முருகதாஷுடன் முறுகல் துப்பாக்கி படத்தின் எடிட்டர் மாற்றம் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions