4 நாட்களில் 15 கோடி வசூலித்த ஈட்டி!

Bookmark and Share

4 நாட்களில் 15 கோடி வசூலித்த ஈட்டி!

கடந்த வெள்ளிக்கிழமை அதர்வா நடிப்பில் வெளிவந்த ஈட்டி படத்தில் தடகள வீரராக அதர்வா நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். இந்த படத்தை ரவி அரசு இயக்கியிருந்தார்.

இப்படம் தமிழகத்தில் சுமார் 400 தியேட்டர்களில் வெளியாகி திரையிட்ட அனைத்து ஏரியாக்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதாக அப்படத்தின் இயக்குனர் ரவி அரசு கூறுகிறார். இதுகுறித்து மேலும்  அவர்  கூறுகையில், “ஈட்டி படத்திற்கு ஏ, பி, சி என அனைத்து சென்டர் ரசிகர்களிடத்தில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதனால் அனைத்து ஏரியாக்களிலும் படம் பெரிய அளவில் வசூலித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், கடந்த 4 நாட்களில் 15 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது. இதுவரை அதர்வா நடித்த படங்களில் இது பெரிய சாதனையாகும். அதனால் ஈட்டி படக்குழுவே மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறோம்.

இந்த வெற்றி காரணமாக, எனக்கும் அடுத்தபடியாக படம் இயக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் ஈட்டி கொடுத்த உற்சாகத்தோடு விரைவில் அடுத்த படத்தை இயக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் ரவிஅரசு.


Post your comment





Related News
இயக்குனரை கொலை செய்ய சதி: நடிகை பிரீத்தி ஜெயினுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம்
மூன்று மொழிகளில் ரீமேக்காகும் ஈட்டி!
ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டத்தில் ஈட்டி!
ஆன்லைன் புக்கிங் தொடங்கிய ஈட்டி
காமன்வெல்த் வீரர்களுடன் மோதிய அதர்வா..!
படப்பிடிப்பில் அடிபட்டு ரத்தம் சிந்திய அதர்வா
அன்பிரீடம் நடிகையின் நிர்வாண படம்!
தடகள ஓட்டப்பந்தய வீரராக அதர்வா!
பரினீதி சோப்ராவுடன் நாக சைதன்யா ஜோடி சேருவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions