50 லட்சம் லாபத்தில் கை மாறியது ஈட்டி படம்..!

Bookmark and Share

50 லட்சம் லாபத்தில் கை மாறியது ஈட்டி படம்..!

நாடோடிகள் உட்பட பல படங்களைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் கடைசியாக தயாரித்த படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே சில கோடிகளை இழந்தார் மைக்கேல் ராயப்பன்.

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் தயாரிப்பில் இருந்தபோதே, அதர்வாவை வைத்து ஈட்டி என்ற படத்தையும் தயாரிக்க ஆரம்பித்தார். வெற்றிமாறனின் உதவியாளர் ரவி அரசு என்பவர்தான் இயக்குநர்.

இவரை மைக்கேல் ராயப்பனுக்கு அறிமுகப்படுத்தியதோடு, தன்னுடைய க்ராஸ்ரூட் பிலிம் கம்பெனி சார்பில் ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் படத்தை எடுத்துத் தருவதாகவும் சொன்னார் வெற்றி மாறன்.

அதை நம்பி பல கோடிகளை முதலீடு செய்தார் மைக்கேல் ராயப்பன். இதற்கிடையில் அதர்வா நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைய ஆரம்பித்தன. கடைசியாக அவர் நடித்த இரும்புக்குதிரைகள் படம் சூப்பர் ப்ளாப். எனவே ஈட்டி படம் வளர்வதில் தடங்கள் ஏற்பட்டது.

மார்க்கெட்டை இழந்துவிட்ட அதர்வாவை வைத்து இந்தப்படத்தைத் தயாரிப்பது பெரிய ரிஸ்க் என்று நினைத்தோ என்னவோ... 50 லட்சம் லாபம் வைத்து ஈட்டி படத்தை கைமாற்றிவிட்டார் மைக்கேல் ராயப்பன்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions