24வது ஆண்டை கொண்டாடும் சூப்பர் ஸ்டாரின் எஜமான்!

Bookmark and Share

24வது ஆண்டை கொண்டாடும் சூப்பர் ஸ்டாரின் எஜமான்!

திரைப்பட ரசிகர்களுக்கு தங்கள் அபிமான நட்சத்திரங்களைக் கொண்டாட ஏதாவது ஒரு காரணம் வேண்டும். இன்றைய இணையதள, சமூக வலைத்தள உலகில் தங்களைக் கவர்ந்த நடிகர், நடிகைகளின் படங்களையும் நினைவு கூர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அதிலும் ரஜினிகாந்த் நடித்த படம் என்றால் கேட்கவே வேண்டாம். இத்தனை வருடங்களாகியும் ரஜினிகாந்தின் பல பழைய படங்களைப் பற்றி ரசிகர்கள் பேசி வருவது வேறு எந்த நடிகருக்கும் நடக்காத ஒன்று.அப்படி ஒரு கொண்டாட்டமான தினம் இன்று.

ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன், ஐஸ்வர்யா, கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்து 23 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் வெளிவந்த படம் எஜமான். பாரம்பரியம் மிக்க நிறுவனமான ஏவிஎம் தயாரிப்பில் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ரஜினிகாந்த் நடித்த கண்ணியமான படங்களில் ஒன்றாக பாராட்டப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்துடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, ரஜினிக்கு ஜோடியாக நடித்த படம் எஜமான். குழந்தையாக நடித்தவர் ஜோடியா என அப்போது ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தினாலும் அந்த ஜோடியும் பொருத்தமான ஜோடியாக அமைந்து தொடர்ந்து வீரா, முத்து என்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களிலும் மீண்டும் இணைந்தது.

பெரிய ஹீரோக்களை வைத்து குடும்பப் பாங்கான படங்களை இயக்குவதில் 90களில் முன்னணியில் இருந்த இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், ரஜினிகாந்த்தை இயக்கிய முதல் படம் இது.

இளையராஜாவின் இசையில் நிலவே முகம் காட்டு, ஆலப் போல், ஒரு நாளும் உனை மறவாத, ஆகிய இனிமையான பாடல்களும், ரஜினி ரசிகர்களுக்காகவே இசையமைக்கப்பட்ட எஜமான் காலடி மண்ணெடுத்து பாடலும் மறக்க முடியாததாக அமைந்தது.ரஜினிகாந்த் நடித்த குடும்பப் பாங்கான, சென்டிமென்ட் படங்களில் எஜமான் படத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions