கோடை விடுமுறையில் வடிவேலுவின் எலி

Bookmark and Share

கோடை விடுமுறையில் வடிவேலுவின் எலி

சுமார் 20 வருடங்களாக தமிழ்த்திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார் வடிவேலு. குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ததால் சினிமாத்துறையினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட வடிவேலு, கடந்த 4 வருடங்களாக படங்களில் நடிக்காமல் வீட்டில் இருந்து வருகிறார்.

இடையில் தெனாலிராமன் என்ற ஒரேயொரு படத்தில் நடித்தார். அவர் கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானபோது படு தோல்வியடைந்தது. அதோடு வடிவேலு காலி என்று பலரும் நினைத்தனர்.

அதற்கு மாறாக, தற்போது எலி என்ற படத்தில் நடிக்கிறார் வடிவேலு. தெனாலிராமன் தோல்விப்படத்தை இயக்கிய இயக்குநர் யுவராஜ் தயாளனே இப்படத்தையும் இயக்குகிறார்.

வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் எலி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிப்ரவரி 5 அன்று தொடங்கியுள்ளது. 1970களின் காலகட்ட பின்னணியில் இப்படத்தின் கதை நிகழ்கிறது.

அதுமட்டுமல்ல, இப்படத்தில் வடிவேலு முழுக்க முழுக்க மதுரைத் தமிழில் பேசி நடிக்கிறார். திரில்லர் கலந்த காமெடி படமாக இது இருக்கும் என்று சொல்கிறார் வடிவேலு.

முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்பட உள்ளது.எலி படத்தை எப்படியாவது வருகிற கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறாராம் வடிவேலு. 


Post your comment





Related News
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
சல்மான்கான் வீட்டில் விடிய விடிய நடந்த விருந்தில் பங்கேற்று விபத்தில் சிக்கிய ஜாக்குலின்
திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகி ஜேக்குலின்- இப்படி ஒரு பிரச்சனையா?
அடடா.. சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி விஜியின் மகளா இது - புகைப்படம் உள்ளே.!
விஜய் டிவியை விட்டு வெளியேறிய பிரபல முன்னணி தொகுப்பாளி - ஏன்? என்ன நடந்தது?
நயன்தாரா கேட்ட ஒரு வார்த்தையில் ஷாக் ஆன ஜாக்லீன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions