எலி - வடிவேலுக்குக் கிடைத்த வலி

Bookmark and Share

எலி - வடிவேலுக்குக் கிடைத்த வலி

இப்படி ஒரு வரவேற்பு தனக்குக் கிடைக்கும் என்று வடிவேலு கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். நேற்று மதியம் சென்னையில் வடிவேலு நடித்து வெளிவந்துள்ள எலி படத்தின் பத்திரிகையாளர் காட்சி நடந்தது. படம் ஆரம்பித்ததிலிருந்து கடைசி வரை ஒரு காட்சியில் கூட யாருமே சிரிக்காமல் படம் பார்த்தார்கள்.
படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் புகையிலை பற்றிய எச்சரிக்கை வாசகத்திற்கு மட்டுமே அனைவரும் சிரித்தார்கள். அந்த அளவிற்கு ஒரு சீரியசான எச்சரிக்கை வாசகத்தை தன்னுடைய உச்சரிப்பால் காமெடியாகப் பேசியிருந்தார் வடிவேலு. இதையெல்லாம் சென்சார் கவனிக்க மாட்டார்களா...?
படம் முடிந்ததும் வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன், தயாரிப்பாளர் ஆகியோர் வந்து மேடை முன் நின்றனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் படத்தை சுவாரசியமாக ரசித்திருப்பார்கள் என தப்புக் கணக்குப் போட்ட வடிவேலு, படம் எப்படியிருந்தது ?” என பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கேட்டார்.
அடுத்த நிமிடம் அரங்கில் அப்படி ஒரு அமைதி. ஒருவர் கூட வாயைத் திறந்து நன்றாக இருக்கிறது என்றும் சொல்லவில்லை, நன்றாக இல்லை என்றும் சொல்லவில்லை. ஒரு கணம் திடுக்கிட்டுப் பின் சுதாரித்துக் கொண்ட வடிவேலு அனைவருக்கும் நன்றி, என சொல்லிவிட்டு மற்றவர்களுடன் வெளியே சென்று விட்டார்.
இப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் சமீப காலமாக திரையிடப்பட்ட எந்த ஒரு படத்திற்கும் கிடைத்ததில்லை, அப்படி ஒரு வலியை பத்திரிகையாளர்கள் வடிவேலுவுக்குக் கொடுத்து விட்டனர்.
இனியாவது, தன்னை ஒரு எம்ஜிஆராக நினைத்துக் கொள்ளாமல், ரசிகர்களை சிரிக்க வைக்கும் வேலையை மட்டும் வடிவேலு பார்க்கட்டும் என பத்திரிகையாளர்கள் முணுமுணுத்துக் கொண்டனர்.


Post your comment





Related News
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
சல்மான்கான் வீட்டில் விடிய விடிய நடந்த விருந்தில் பங்கேற்று விபத்தில் சிக்கிய ஜாக்குலின்
திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகி ஜேக்குலின்- இப்படி ஒரு பிரச்சனையா?
அடடா.. சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி விஜியின் மகளா இது - புகைப்படம் உள்ளே.!
விஜய் டிவியை விட்டு வெளியேறிய பிரபல முன்னணி தொகுப்பாளி - ஏன்? என்ன நடந்தது?
நயன்தாரா கேட்ட ஒரு வார்த்தையில் ஷாக் ஆன ஜாக்லீன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions