இடைத்தேர்தல் எதிரொலி: சினிமாவுக்கு கேளிக்கை வரி ரத்து.?

Bookmark and Share

இடைத்தேர்தல் எதிரொலி: சினிமாவுக்கு கேளிக்கை வரி ரத்து.?

வருகிற 27ந் தேதி சென்னை மாநகரில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி தேர்தல் முடியும் வரை அரசு வழங்கி வரும் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தமிழில் பெயர் வைத்த திரைப்படங்களுக்கு அரசு அளித்து வந்த கேளிக்கை வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வடிவேலு நடித்த எலி, சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான், ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல படங்களுக்கு கேளிக்கை வரி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடிவேலு நடித்த எலி படம் முழுக்க முழுக்க வன்முறை ஆபாசம் இல்லாத காமெடி படம் அதற்குகூட வரிவிலக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் முடியும் வரை வரிவிலக்கு சலுகையை நிறுத்துமாறு சம்பதப்பட்டவர்களுக்கு வந்த தகவலையடுத்து கேளிக்கை வரிச் சலுகை நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கேளிக்கை வரி 30 சதவிகிதம் என்பதால் வசூலில் பெரும்தொகை அரசுக்கு வரியாக சென்று விடும்.

இதனால் கேளிக்கை வரி கிடைக்காத படங்கள் தவிப்பில் இருக்கிறது. இந்த மாதம், மற்றும் அடுத்த மாதம் வெளிவருவதாக இருந்த பல படங்கள் தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளன.

 


Post your comment





Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
போகன் டீசர் ரிலீஸ் தேதி வெளியானது!
மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் ரோமியோ ஜூலியட் கூட்டணி!
பாபநாசம் திருட்டு டி.வி.டி. தயாரித்து விற்றவர் கைது
ரோமியோ ஜூலியட் படம் சாதனை!
இந்தியில் ரீமேக்காகும் ரோமியோ ஜூலியட்?
ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?
பூனம் பாஜ்வாவை புலம்ப விட்ட ரோமியோ ஜூலியட்!
ரோமியோ ஜுலியட் ஹிட்டாமே...?
ஜெயம்ரவியின் டபுள் ஹீரோயின் எக்ஸ்பீரியன்ஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions