காமெடி சீசன் தொடங்குமா?

Bookmark and Share

காமெடி சீசன் தொடங்குமா?

அருந்ததியா? முனியா? பீட்சாவா? தமிழில் தற்போது சக்கைப்போடுபோட்டுக் கொண்டிருக்கும் பேய்ப்பட சீசனை தொடங்கி வைத்த படம் எது என்பதில் குழப்பம் இருக்கவே செய்கிறது.

ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவை பேய் படங்கள்தான் ஆட்டி படைத்து வருகின்றன! வரிசையாக பல பேய் படங்கள் வெளியானாலும் அதில் வசூலை குவித்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்!  இந்த ஆண்டில் வெளியான பேய்ப்படங்களில்..

டார்லிங், காஞ்சனா-2, டிமான்டி காலனி ஆகிய படங்களே வெற்றிப்படங்கள். சூர்யாவின் நடிப்பில் வெளியான, மாஸ் என்கிற மாசு என்கிற மாசிலாமணி படம் சுமாரான வசூலையே பெற்றிருக்கிறது.

பேய்ப்படங்களில் ஒரு சில படங்களே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வசூலையும் கொடுத்தது.  என்றாலும் இன்னும் நிறைய பேய் படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் விரைவில் பேய்ப்பட சீசன் முடிவுக்கு வர இருக்கிறதோ என தோன்றுகிறது.

அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகளை பார்க்கும்போது இனி வருவது காமெடி சீஸன்தான் என்பதையும் உணர முடிகிறது. உதாரணதுக்கு இந்த வாரம் 12-6-15 அன்று வெளியாகவிருக்கும் சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படம் வெளியாகிறது. இது முழுக்க முழுக்க காமெடி படம்.  

இதே தினத்தில் வெளியாகவிருக்கும் ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்திலும் காமெடிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் அதாவது ஜூன்-19 அன்று வடிவேலுவின் எலி படம் வெளியாகவிருக்கிறது. அதேதினத்தில்தான் இன்னொரு காமெடி படமான அருள் நிதி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படமும் ரிலீசாகிறது.

ஜூன் 26 அன்று சிம்பு நடித்த வாலு படம் வெளியாக இருக்கிறது. இதுவும் முழுக்க முழுக்க காமெடி படமே. இந்தப் படங்கள் தவிர கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள 49-ஓ மற்றும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை படங்களும் தயாராகி வருகின்றன.

இந்தப் படங்கள் உட்பட மேலும் பல காமெடி படங்கள் ரிலீசாகி தயாராகி வருகின்றன. இவற்றில் ஏதாவது ஒரு படம் சூப்பர் ஹிட்டானால் காமெடி சீசன் தொடங்குவது உறுதி?


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions