பெயர்தான் எலி, நிஜத்துல சிங்கமாம்

Bookmark and Share

பெயர்தான் எலி, நிஜத்துல சிங்கமாம்

இது என்ன அண்டர்வேர் ஸாரி, அண்டர் கவர் காப் காலமா? மீகாமனில் அண்டர் காப், என்னை அறிந்தாலில் அண்டர் கவர் காப் எலியும் அதே கதைதானாம். தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படம்தான் இந்த, எலி.

எதிரிகளின் நடுவில் யாராவது ஊடுருவினால் அவரை கறுப்பு ஆடு என்பார்கள். இதுவே லோக்கல் கொள்ளை கூட்டம் என்றால் கறுப்பு ஆட்டிற்கு பெயர், எலி. அப்படியொரு எலியாக எதிரிகளின் கூட்டத்தில் நுழைந்து அவர்களை துவசம் செய்கிறார் வடிவேலு. 

படத்தின் கதை நடப்பது எழுபதுகளில். ஜெய்சங்கர் அந்தக் காலத்தில், ஜேம்ஸ்பாண்டை நகலெடுத்து பல படங்களில் நடித்தார் அல்லவா? அதேபோல் இந்தப் படத்தில் வடிவேலு மதுரை பாஷை பேசி கலக்கப் போகிறாராம். 

இந்தப் படத்திலாவது இயக்குனருக்கான வேலையை செய்ய அனுமதிக்குமா காமெடி புயல்?


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions