வடிவேலுவின் எலி... வெளியானது ஃபர்ஸ்ட்லுக்!

Bookmark and Share

வடிவேலுவின் எலி... வெளியானது ஃபர்ஸ்ட்லுக்!

வடிவேலு அடுத்து ஹீரோவாக நடிக்கும் எலி படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று வெளியானது. மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் என்ற படத்தில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்தார்.

அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இப்போது மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தெனாலிராமனை இயக்கிய யுவராஜ் தயாளன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். வித்யாசாகர் இசையமைக்க, ஆரூர்தாஸ் வசனம் எழுதுகிறார்.

ஜி சதீஷ் குமார், அமர்நாத் தயாரிக்கிறார்கள்.படத்தில் வடிவேலுவின் வேடம் எப்படி இருக்கும் என்ற ரசிகர்களின் ஆவலைத் தீர்க்கும் வகையில் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

அதில் பழைய டைப் கார் ஒன்றின் பேனட் மீது, கட்டம் போட்ட பேன்ட், ஒரு சிவப்பு ஓவர் கோட், மஞ்சள் ஸ்கார்ப் காஸ்ட்யூமில் சாய்ந்தபடி போஸ் கொடுக்கிறார் வடிவேலு. சுருள் முடி, ரவுண்டு கண்ணாடி, குறுகிய முறுக்கு மீசையுடன், பக்கா பழைய வடிவேலுவாக காட்சி தருகிறார்.

தெனாலிராமன் மாதிரி சீரியஸான படமில்லை.. இது சிரிப்புப் படம் என்பதை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது இந்த போஸ்டர்.


Post your comment





Related News
எலி படத்தை தவறாக விமர்சிப்பவர்கள் சைக்கோ! - வடிவேலு வெளியிட்ட வீடியோ
சோலோவாக கலக்குமா எலி?
தள்ளிப்போகும் வடிவேலுவின் எலி!
எலி வடிவேலுவுக்கு ஓப்பனிங் சாங்!
இன்னும் 10 நாளில் எலி படப்பிடிப்பு முடிவடைகிறது!
எலி படத்தின் டப்பிங்கை தொடங்கினார் வடிவேலு!
அந்த எலியை அடிச்சு கொல்லுங்கடா
எலிக்காக சென்னையில் ஆட்டம் போட்ட வடிவேலு-சதா
15 கோடியில் உருவாகும் வடிவேலுவின் எலி!
எலி யூனிட்டுக்கு வடிவேலு போட்ட கண்டிசன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions