சோலோவாக கலக்குமா எலி?

Bookmark and Share

சோலோவாக கலக்குமா எலி?

காக்கா முட்டை படத்தைப் போலவே பல சர்வதேச திரைப்படவிழாக்களில் விருதுகளை வென்ற படம் குற்றம் கடிதல். கிறிஸ்ட்டி என்பவரது தயாரிப்பில் பிரம்மா இயக்கிய இந்தப்படத்தை பிரபல விநியோகஸ்தரான ஜே.சதீஷ்குமார் வாங்கினார். குற்றம் கடிதல் படம் விருதுகளை அள்ளக்கூடிய படம் என்பதை புரிந்து கொண்டு, அதை மிகச்சரியாய் மார்க்கெட்டிங் செய்தார். பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களுக்கும் படத்தை அனுப்பினார். தேசியவிருது உட்பட ஏகப்பட்ட சர்வதேச விருதுகளை வென்ற குற்றம் கடிதல் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய நினைத்தபோது வரிசையாக படங்கள் வெளியாகி, 

தியேட்டர் கிடைக்கவே இல்லை. மார்ச் 30 அன்று படத்தை வெளியிட தீர்மானித்து விளம்பரங்கள் செய்தார் சதீஷ்குமார். அந்த தேதியில் படத்தைக் கொண்டு வர முடியவில்லை. இந்நிலையில் ஜூன் 19 அன்று குற்றம் கடிதல் படத்தை வெளியிட்டே தீருவது என்ற முடிவில் உறுதியாக இருந்தார். பல நாட்கள் பப்ளிசிட்டியும் கொடுக்கப்பட்டது. அதே நாளில் தான் வாங்கிய நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படத்தையும் வெளியிட இருந்தார் சதீஷ்குமார். லேட்டஸ்ட் தகவலின்படி, ஜூன் 19 அன்று குற்றம் கடிதல் மற்றும் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் இரண்டு படங்களுமே வெளியாகவில்லை.

காரணம்? இப்படங்களை வெளியிடும் சதீஷ்குமாருக்கு விபத்து ஏற்பட்டதால் தற்போது ஓய்வில் இருக்கிறாராம். உடல்நிலை தேறி வந்த பிறகே குற்றம் கடிதல் மற்றும் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படங்கள் திரைக்கு வருமாம். இந்த இரண்டு படங்களும் வராமல்போனது எலிக்கு ப்ளஸ்ஸாகிவிட்டது.


Post your comment





Related News
எலி படத்தை தவறாக விமர்சிப்பவர்கள் சைக்கோ! - வடிவேலு வெளியிட்ட வீடியோ
தள்ளிப்போகும் வடிவேலுவின் எலி!
எலி வடிவேலுவுக்கு ஓப்பனிங் சாங்!
இன்னும் 10 நாளில் எலி படப்பிடிப்பு முடிவடைகிறது!
எலி படத்தின் டப்பிங்கை தொடங்கினார் வடிவேலு!
அந்த எலியை அடிச்சு கொல்லுங்கடா
எலிக்காக சென்னையில் ஆட்டம் போட்ட வடிவேலு-சதா
15 கோடியில் உருவாகும் வடிவேலுவின் எலி!
எலி யூனிட்டுக்கு வடிவேலு போட்ட கண்டிசன்!
வடிவேலுவின் எலி... வெளியானது ஃபர்ஸ்ட்லுக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions