எலி படத்தின் டப்பிங்கை தொடங்கினார் வடிவேலு!

Bookmark and Share

எலி படத்தின் டப்பிங்கை தொடங்கினார் வடிவேலு!

தெனாலிராமன் கொடுத்த தோல்வியை விரட்டியடித்து விட்டு வெற்றிப்பட ஹீரோவாகி விட வேண்டும் என்று எலி படத்தில் அதிக ஈடுபாடு காட்டி நடித்துள்ளார் வடிவேலு. குறிப்பாக, இன்றைய கால கட்டத்தில் ஒரு திருடனுக்கு எந்தெந்த வகையில் ரிஸ்க் உள்ளது.

அதை அவன் எப்படியெல்லாம் சமாளிக்கிறான் என்பதை ஒரு இலாகாவை வைத்து கதையை உருவாக்கி நடித்துள்ளார். அதோடு, ஹீரோயிசத்தையும் இந்த படத்தில் சற்று தூக்கலாக வெளிப்படுத்தியிருக்கும் வடிவேலு, இதற்கு முந்தைய படங்களை விட இந்த படத்தில் சதாவுடன் மற்ற ஹீரோக்களுக்கு இணையாக டச்சிங் கொடுத்து ஆட்டம் போட்டிருக்கிறார்.

அது கிளுகிளுப்பாகவும் படமாகியிருக்கிறதாம். மேலும், கடந்த இரண்டு மாதங்களாக இடைவிடாத படப்பிடிப்பு நடத்தி வந்த வடிவேலு தற்போது 95 சதவிகிதம் காட்சிகளில் நடித்து முடித்து விட்டார்.

இன்னும் இரண்டொரு பாடல்கள் மட்டுமே பாக்கி உள்ளதாம். இந்த நிலையில், தற்போது தான் நடித்துக்கொண்டிருந்தாலும், மற்ற கேரக்டர்களில் நடித்தவர்களை அழைத்து டப்பிங் பேசுமாறு கூறியுள்ளார்.

அதனால், படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, டப்பிங் வேலைகளும் துரிதமாக நடக்கிறது. எஞ்சியுள்ள பாடல் காட்சிகளில் நடித்து முடித்ததும் கடைசியாக வடிவேலு டப்பிங் பேசுகிறாராம். ஆக, கோடை விடுமுறையில் ரசிகர்களின் பார்வைக்கு வடிவேலுவின் எலி வருவது உறுதியாகி விட்டது என்கிறார்கள்.

 


Post your comment





Related News
எலி படத்தை தவறாக விமர்சிப்பவர்கள் சைக்கோ! - வடிவேலு வெளியிட்ட வீடியோ
சோலோவாக கலக்குமா எலி?
தள்ளிப்போகும் வடிவேலுவின் எலி!
எலி வடிவேலுவுக்கு ஓப்பனிங் சாங்!
இன்னும் 10 நாளில் எலி படப்பிடிப்பு முடிவடைகிறது!
அந்த எலியை அடிச்சு கொல்லுங்கடா
எலிக்காக சென்னையில் ஆட்டம் போட்ட வடிவேலு-சதா
15 கோடியில் உருவாகும் வடிவேலுவின் எலி!
எலி யூனிட்டுக்கு வடிவேலு போட்ட கண்டிசன்!
வடிவேலுவின் எலி... வெளியானது ஃபர்ஸ்ட்லுக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions