இன்னும் 10 நாளில் எலி படப்பிடிப்பு முடிவடைகிறது!

Bookmark and Share

இன்னும் 10 நாளில் எலி படப்பிடிப்பு முடிவடைகிறது!

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் தெனாலிராமனைத் தொடர்ந்து வடிவேலு நடித்து வரும் படம் எலி. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னையை சுற்றியே நடந்து கொண்டிருக்கிறது. சதா ஒரு கேரக்டரில் நடிக்க, அவருடன் ஒரு குத்தாட்டமும் போட்டிருக்கிறார் வடிவேலு.

அதோடு, ஆரம்பத்தில் தனது பழைய காமெடியன்கள் யாரையும் நடிக்க அழைக்கவில்லை வடிவேலு. இதனல் அவர்கள் எல்லோருமே தங்களை அவர் மறந்து விட்டதாக பீல் பண்ணிக்கொண்டு வந்தனர்.

ஆனால் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டும் வரை அவர்களைப் பற்றி யோசிக்காத வடிவேலு. தற்போது தனது முன்னாள் காமெடி கூட்டணிகளான கிங்காங், அமிர்தலிங்கம், டெலிபோன் ராஜ் உள்ளிட்ட சில காமெடியன்களை அழைத்து அவர்களுக்கும் சில காட்சிகளில் நடிக்க சான்ஸ் கொடுத்துள்ளார்.

மேலும், தற்போது டப்பிங் பணிகளையும் ஒரு பக்கம் தொடங்கி விட்ட வடிவேலு, நேற்று சில காமெடி காட்சிகளை சென்னையிலுள்ள மோகன் ஸ்டுடியோவில் படமாக்கினார்.

அதையடுத்து இன்று முதல் மீண்டும் பின்னி மில்லில் படப்பிடிப்பு நடக்கிறது. ஆக, இன்னும் 10 நாட்களில் எலி படத்தின் அனைத்துகட்ட படப்பிடிப்பும் முடிவடைந்து பூசணிக்காய் உடைத்து விடுவார்களாம்.

 


Post your comment





Related News
எலி படத்தை தவறாக விமர்சிப்பவர்கள் சைக்கோ! - வடிவேலு வெளியிட்ட வீடியோ
சோலோவாக கலக்குமா எலி?
தள்ளிப்போகும் வடிவேலுவின் எலி!
எலி வடிவேலுவுக்கு ஓப்பனிங் சாங்!
எலி படத்தின் டப்பிங்கை தொடங்கினார் வடிவேலு!
அந்த எலியை அடிச்சு கொல்லுங்கடா
எலிக்காக சென்னையில் ஆட்டம் போட்ட வடிவேலு-சதா
15 கோடியில் உருவாகும் வடிவேலுவின் எலி!
எலி யூனிட்டுக்கு வடிவேலு போட்ட கண்டிசன்!
வடிவேலுவின் எலி... வெளியானது ஃபர்ஸ்ட்லுக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions