எலி படத்தை தவறாக விமர்சிப்பவர்கள் சைக்கோ! - வடிவேலு வெளியிட்ட வீடியோ

Bookmark and Share

எலி படத்தை தவறாக விமர்சிப்பவர்கள் சைக்கோ! - வடிவேலு வெளியிட்ட வீடியோ

தெனாலிராமன் படத்தை அடுத்து வடிவேலு நாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் படம் எலி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சதா நடித்துள்ளார். யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது.

முன்னதாக, படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காண்பித்தபோது, படம் முடிந்ததும் டைரக்டர் யுவராஜூடன் வடிவேலு பிரிவியூ தியேட்டருக்கு வந்தார்.

அப்போது, மீடியாக்களிடம் படம் எப்படி இருக்கிறது? என்று கேட்டார். ஆனால் அப்போது யாருமே எதுவும் சொல்லவில்லை. இதனால் வடிவேலுவும், யுவராஜூம் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் நல்லபடியாக விமர்சனம் எழுதுமாறு கேட்டுக்கொண்டு விடைபெற்றனர்.

இந்த நிலையில், எலி படத்தைப்பற்றி இரண்டுவிதமாகவும் விமர்சனங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் வடிவேலு. அதில், நான் எலி படத்தை தியேட்டர்களுக்கு சென்று பார்த்தேன். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்சாய் பண்ணி பார்த்து ரசிக்கிறார்கள்.

ஆனால், சிலர் எலி படம் பற்றி நல்லபடியாக விமர்சனம் எழுதியபோதும், சிலர் தவறாக எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு எலி என்றாலே பிடிக்காதோ என்னவோ, அந்த கோபத்தை எலி படம் மீது காட்டியிருக்கிறார்கள்.

ஆனால் இன்னும் சிலர் படத்தை பார்க்காமலேயே மற்றவர்கள் சொல்வதை வைத்தும் எழுதுகிறார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த படத்தை இப்படி கண்டபடி எழுதுவது வேதனையாக உள்ளது. மேலும், ஒரு தரமான படத்தை தவறாக விமர்சிப்பவர்கள் சைக்கோவாகத்தான் இருக்க முடியும். இதைதவிர எனக்கு வேறு எதுவும் சொல்லத்தோன்றவில்லை என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் வடிவேலு.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions