எலி வடிவேலுவுக்கு ஓப்பனிங் சாங்!

Bookmark and Share

எலி வடிவேலுவுக்கு ஓப்பனிங் சாங்!

ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்கள் ஒரு ஓப்பனிங் சாங் மூலம் தங்களை அறிமுகம் செய்து கொண்டு வந்தனர். ஆனால் காலப்போக்கில் அது மாறி விட்டது. தற்போது அஜித் உள்ளிட்ட சில ஹீரோக்கள் எந்தவித பில்டப்பும் தேவையில்லை என்று சொல்லியே நடிக்கிறார்கள்.

ஆனால் வடிவேலு தற்போது நடித்துள்ள எலி படம் 1960களில் நடக்கும் கதை என்பதால், அந்த காலகட்டத்து ஹீரோக்கள் போன்றே அப்படத்தில் நடித்துள்ள வடிவேலு, அதன்பிறகு 1980-90களில் நடித்த ஹீரோக்கள் ஓப்பனிங் பாடல்களில் அறிமுகமானது போல் இந்த படத்தில் வடிவேலுவும் ஒரு ஓப்பனிங் பாடல் மூலம் தான் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாராம்.

அந்த பாடலுக்காக வித்யாசாகரிடம் நூற்றுக்கணக்கான டியூன்களை போட வைத்து அதில் இருந்து ஒன்றை ஓகே செய்துள்ள வடிவேலு, கடைசியாக அந்த பாடலைத்தான் கம்போஸ் செய்யச்சொல்லியிருக்கிறார்.

அந்தவகையில், தற்போது எலி படத்தின் டப்பிங் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், அந்த ஓப்பனிங் பாடல் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். மேலும், அந்த பாடலை ஒரு நல்ல லொகேசனில் படமாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள வடிவேலு, அதற்காக வெளிநாடெல்லாம் செல்லப்போவதில்லையாம்.

வட இந்தியாவில் ஒரு நல்ல இடத்தை தேடிப்பிடித்து படமாக்கப்போகிறாராம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


Post your comment





Related News
எலி படத்தை தவறாக விமர்சிப்பவர்கள் சைக்கோ! - வடிவேலு வெளியிட்ட வீடியோ
சோலோவாக கலக்குமா எலி?
தள்ளிப்போகும் வடிவேலுவின் எலி!
இன்னும் 10 நாளில் எலி படப்பிடிப்பு முடிவடைகிறது!
எலி படத்தின் டப்பிங்கை தொடங்கினார் வடிவேலு!
அந்த எலியை அடிச்சு கொல்லுங்கடா
எலிக்காக சென்னையில் ஆட்டம் போட்ட வடிவேலு-சதா
15 கோடியில் உருவாகும் வடிவேலுவின் எலி!
எலி யூனிட்டுக்கு வடிவேலு போட்ட கண்டிசன்!
வடிவேலுவின் எலி... வெளியானது ஃபர்ஸ்ட்லுக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions