காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்

Bookmark and Share

காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்

இலங்கையில் வளர்ந்துவரும் இளம் இசையமைப்பாளரான யஜீவன் இசையமைத்து பாடியுள்ள “என் கண்ணம்மா” பாடலில் கடந்த காலங்களில் பாடலாசிரியராக செயற்பட்டு வந்த எஸ்.ஜீ.பிரபு சொல்லிசைக்கலைஞனாக அறிமுகமாகியுள்ளார். 

இப்பாடலின் இசைக்கலவையினை பிரேம் ராஜ் செய்துள்ளதோடு, பாடலின் ஒளிப்பதிவினை பிரவீன் செய்துள்ளார். குறித்த பாடலினை கஜன் கே கலையமுதன் இயக்கியதோடு பாடலின் தொகுப்பாக்கம் பணியினையும் செய்துள்ளார்.

காதலர் தினத்தன்று வெளியான இப்பாடல் காதலில் ஏற்படும் சில உண்மை சம்பவங்களை வெளிப்படுத்தும் விதமாக கொஞ்சம் கோபம் நிறைய காதல் என்பதை மையப்பொருளாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் காணொளியில் டிலானி மற்றும் யஜீவன் நடித்துள்ளனர்.

இந்தப் பாடல் முற்றிலும் இளம் வயதினரின் படைப்பாகவுள்ளது சிறப்பம்சமாகும். மேலும், இப்பாடல் இந்தியாவின் பிரபலமான DIVO யூடியூப் அலைவரிசையில் வெளியிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
இரண்டு விஜய்யை ஒரே நேரத்தில் இயக்கும் மூடர் கூடம் நவீன்
மகத்தை நினைத்து உருகும் யாஷிகா
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்
ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions