சித்தார்த்தை ஏமாற்றிய 'எனக்குள் ஒருவன்'

Bookmark and Share

சித்தார்த்தை ஏமாற்றிய 'எனக்குள் ஒருவன்'

ஒரு படத்தை தயாரிப்பது பெரிய விஷயமல்ல, அந்தப் படத்தை சரியான விதத்தில், சரியான சமயத்தில் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். பல நல்ல படங்கள் தவறான  சமயத்தில் வெளியிடப்பட்டு, அந்தப் படத்தில் நடித்தவர்களையும், மற்ற கலைஞர்களையும் ஏமாற்றியிருக்கிறது. இப்போது அந்த வரிசையில் 'எனக்குள் ஒருவன்' படமும் இடம் பிடித்துள்ளது.

கிரிக்கெட், பரீட்சை நேரம், 'அனேகன், காக்கி சட்டை' படங்கள் ஏற்கெனவே திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ள நிலையில் 6ம் தேதி வெளியான 'எனக்குள் ஒருவன்' படத்திற்கு பெரும்பாலான ஏரியாக்களில் தியேட்டர்களே கிடைக்கவில்லையாம். கன்னடத்தில் 110 பேர் ஒன்றிணைந்து முதலீடு செய்து 'கிரௌட் ஃபண்டிங்' முறையில் பவன்குமார் என்ற இயக்குனரால் உருவாக்கப்பட்ட 'லூசியா' என்ற திரைப்படத்தின் ரீமேக்தான் 'எனக்குள் ஒருவன்'.

இப்படத்தின் தரத்தாலும், வசூலாலும் கன்னடத் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம். அப்படிப்பட்ட ஒரு தரமான படத்தை அதே அளவிற்கு தமிழிலும் பிரசாத் ராமர் என்ற அறிமுக இயக்குனர் உருவாக்கினார்.

சித்தார்த் மிக மிகக் குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டு இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார்.  அப்படிப்பட்ட ஒரு தரமான படைப்பை எதற்காக இப்படி ஒரு சிக்கலான சமயத்தில் வெளியிட்டு சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று சித்தார்த் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறாராம்.

சென்னை, கோவை உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மட்டும் ஓரளவிற்கு வரவேற்புடன் ஓடி வரும் இப்படத்தை வெளியூர்களில் 100 பேர் கூட தியேட்டர்களுக்கு வராத நிலையே  உள்ளதாம்.

படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தாலும் அது படத்துக்கு எந்த விதமான வசூலையும் அதிகப்படுத்திக் கொடுக்கவில்லையாம். தெலுங்குத் திரையுலகமே வேண்டாமென தமிழ்ப் படங்களில் நடிக்க முடிவெடுத்த சித்தார்த்துக்கு தொடர்ந்து தோல்விகளே கிடைத்து வருகிறது.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions