மார்ச் 6ஆம் தேதி எனக்குள் ஒருவன்

Bookmark and Share

மார்ச் 6ஆம் தேதி எனக்குள் ஒருவன்

ஜிகர்தண்டா மற்றும் காவியத்தலைவன் படங்களுக்குப் பிறகு சித்தார்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் - எனக்குள் ஒருவன்.  க்ரவுட் ஃபண்டிங் மூலம் உருவாக்கப்பட்டு வெற்றிபெற்ற லூசியா கன்னடத் திரைப்படம்தான் தமிழில் எனக்குள் ஒருவன் படமாக ரீமேக் ஆகியிருக்கிறது.

கனவில் ஒரு வாழ்க்கை, நிஜத்தில் ஒரு வாழ்க்கை என ஹீரோ சித்தார்த்தின் இரண்டுவிதமான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை இது. எனவே எனக்குள் ஒருவன் என்ற தலைப்பு கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் கவிதாலயாவில் முறைப்படி அனுமதி பெற்று இந்தப்பெயரை சூட்டினார்கள்.  

சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன் ஆகியோர் இணைந்து எனக்குள் ஒருவன் படத்தை தயாரித்திருக்கின்றனர். சி.வி.குமார் தயாரித்த பல படங்களில் அஸோஸியேட் டைரக்டராக பணியாற்றிய பிரசாத் ராமர் இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

லூசியா கன்னடப்படத்தில் கதாநாயகியாக நடித்த கன்னட நடிகை தீபா சன்னிதியே சித்தார்த்துக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் எனக்குள் ஒருவன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

பாடல்கள், டீஸர், டிரைலர் என அனைத்தும் வெளியிடப்பட்டு பல மாதங்களாகிவிட்டன. தியேட்டர் கிடைக்காத காரணத்தினால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, இப்படத்தை வரும் மார்ச் 6ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறது ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம்.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions