ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் ட்ரீம் பேக்டரி!

Bookmark and Share

ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் ட்ரீம் பேக்டரி!

சி.வி.குமார் உட்பட பல இளம் தயாரிப்பாளர்கள் உடன் கூட்டணி அமைத்து ட்ரீம் ஃபேக்டரி என்ற பட விநியோக கம்பெனியை ஆரம்பித்தார் ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல். ட்ரீம் ஃபேக்டரி மூலம் படத்தை ரிலீஸ் செய்து கொடுக்க வேண்டும் என்றால் 14 சதவிகிதம் கமிஷன் கொடுக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் ஸ்டுடியோ கிரீன்" நிறுவனமும், இணைந்து தயாரித்த டார்லிங் படத்தை வெளியிட்டது ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம்.

தற்போது, தனது அடுத்த வெளியீடாக சித்தர்த் நடித்துள்ள எனக்குள் ஒருவன் படத்தை மார்ச்-6 ஆம் தேதி ரிலீஸ் செய்கிறது. லூசியா கன்னட படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியுள்ள எனக்குள் ஒருவன் படத்தில் சித்தார்த்துடன் தீபா சன்னதி நடித்துள்ளார். பிரசாத் ராமர் இயக்கியுள்ளார்.  

எனக்குள் ஒருவன் படத்தை ஏற்கெனவெ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம், அதே நாளில் மற்றுமொரு படத்தையும் ரிலீஸ் செய்யவிருக்கிறது. அந்தப் படம்... வினய் ஹீரோவாக நடித்துள்ள சேர்ந்து போலாமா?. நியூசிலாந்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள ரொமான்டிக் காதல் கதைதான் இப்படம்.

அனில் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் வினய்யுடன் மதுரிமா, ப்ரீத்தி முதலானோர் நடித்துள்ளனர். ஒரு நிறுவனம் ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்வது திரையுலகினர் ஆச்சர்யமாகப்பார்க்கின்றனர். அதே சமயம் அகலக்கால் ஆகாமல் இருக்கணும்! 


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions