எனக்குள் ஒருவனால் எட்டிப்பிடிக்க முடியாத காக்கி சட்டை!

Bookmark and Share

எனக்குள் ஒருவனால் எட்டிப்பிடிக்க முடியாத காக்கி சட்டை!

சிவகார்த்திகேயன்- ஸ்ரீதிவ்யா நடித்த காக்கி சட்டை படம் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியானது. தனுஷ் தயாரித்த இந்தப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட்டார்.

சுமார் 375 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட காக்கி சட்டை படத்துக்கு  அஜித், விஜய் படங்களைப்போல் மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தது. முதல் மூன்று நாட்களிலேயே படத்தின் தயாரிப்பு செலவுக்கு மேல் மூன்று மடங்கு தொகையை வசூல் செய்தது.

காக்கி சட்டை படத்தைப் பற்றிய ரசிகர்களின் கருத்து இருவிதமாக இருந்தாலும், அது வசூலை பாதிக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம். படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்தும் இன்னும் 300 தியேட்டர்களுக்கு மேல் காக்கி சட்டை படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

காக்கி சட்டை படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து வெளியான படம் - எனக்குள் ஒருவன். சித்தார்த் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தினால் கூட காக்கி சட்டை படத்தின் வசூலை நெருங்க முடியவில்லை.

இன்றைய தேதியில், தமிழக பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி காக்கி சட்டை படமே முதலில் இருக்கிறது. எனக்குள் ஒருவன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அனேகன் மூன்றாம் இடத்திலும், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் நான்காவது இடத்திலும், என்னை அறிந்தால் ஐந்தாவது  இடத்திலும் உள்ளது.


Post your comment





Related News
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
பாம்பு சட்டையை பெரிதும் நம்பும் பாபி சிம்ஹா!
பாம்பு சட்டை படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்டப் பணிகள் துவக்கம்
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
பாம்புசட்டை படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை!
பாம்பு சட்டை படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடித்த படக்குழு
பாம்பு சட்டை படப்பிடிப்பு 5 நாள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது!
பாபி சிம்ஹாவுக்காக காத்திருக்கும் பாம்புசட்டை யூனிட்!
75 லட்சத்திற்கு விலைபோன தெலுங்கு எனக்குள் ஒருவன்
காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions