தெலுங்கில் திரைக்கு வந்த எனக்குள் ஒருவன்

Bookmark and Share

தெலுங்கில் திரைக்கு வந்த எனக்குள் ஒருவன்

கன்னட திரை உலகில் பெரும் வெற்றி லூசியா திரைப்படம் நடிகர் சித்தார்த் நடிப்பில் தமிழில் எனக்குள் ஒருவன் என்ற பெயரில் திரைக்கு வந்தது.

கன்னடத்தில் பலர் சேர்ந்து தயாரித்து வெற்றி கண்ட இப்படத்தின் வெற்றி அங்கு ஒரு புதிய சாதனையாகவே பார்க்கப்பட்டது. ஆனால் நடிகர் சித்தார்த் அதிக நம்பிக்கையுடன் தமிழில் ரீமேக் செய்த இப்படம் தோல்வியைத் தழுவியது.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்த எனக்குள் ஒருவன் படத்தில்  நாயகனாக சித்தார்த், நாயகியாக தீபா சன்னிதி நடித்துள்ளனர்.

இவர்களுடன் நரேன், சிருஷ்டி டாங்கே, மகாதேவன், யோக்ஜேபி, மகேஷ், அஜய்ரத்னம் ஆகியோரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேற்று திரைக்கு வந்துள்ளது. தமிழில் உச்ச நட்சத்திரமாக திகழும் சித்தார்த் தெலுங்கில் கொடுத்த கடைசி வெற்றி திரைப்படம் என்றால் 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சம்திங் சம்திங் தானாம்.

அதற்கு அடுத்து அவரது நடிப்பில் வெளிவந்த அணைத்து படங்களும் சுமார் ரகம் தானாம். அந்த வகையில் தமிழ் ரசிகர்கள் கைவிட்ட எனக்குள் ஒருவன் படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் கை கொடுத்திருக்கிறார்களா என்று இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்


Post your comment





Related News
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
தனி ஒருவன் படத்தை நிராகரித்த பிரபல முன்னணி நடிகர் - மோகன் ராஜா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!
சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்!
தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்குக்கு கிடைத்த பாராட்டு!
அதர்வா படத்தில் இணைந்த தனி ஒருவன் கூட்டணி!
தமிழ் சினிமாவின் ‘தனி ஒருவன்’ ஜெயம் ரவிக்கு பிறந்தநாள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions