என்னோடு விளையாடு: குதிரை பந்தைய கதை

Bookmark and Share

என்னோடு விளையாடு: குதிரை பந்தைய கதை

பரத் நடித்து வரும் புதிய படம் என்னோடு விளையாடு. அவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். இந்த ஜோடியுடன் மதயானைக்கூட்டம் கதிரும், அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டியும் நடிக்கிறார்கள். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மொஸ் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார்.

புதுமுகம் அருண் கிருஷ்ணசாமி இயக்குகிறார்.படத்தின் கதை குதிரை பந்தையத்தை மையமாக கொண்டது. பரத் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உயர் பதவியில் இருக்கிறவர்.

அவருக்கு சாகசங்கள் செய்வதில் விருப்பம் அதிகம். குறிப்பாக குதிரையேற்றம். சிறுவயதில் இருந்தே குதிரைகள் மீது ஒரு மோகம் அவருக்கு. சென்னையில் நடக்கும் ஒரு முக்கிய குதிரைபந்தையத்தில் பரத் கலந்து கொள்ள தயாராகிறார்.

அங்குதான் அவர் கதிரை சந்திக்கிறார்.கதிர் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்திருக்கும் ஒரு இளைஞர். அவர் ஒரு நண்பனின் அறையில் ஒரு நாள் தங்குகிறார். அந்த ஒரு நாளில் அவர் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.

அதிலிருந்து தப்பிக்க அவர் அலைந்து கொண்டிருக்கும்போதுதான் குதிரை பந்தைய மைதானத்தில் பரத்தை சந்திக்கிறார். கதிருக்கும், பரத்திற்கும் என்ன சம்பந்தம். சந்திப்புக்கு பிறகு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் பரபர திரைக்கதை.


Post your comment





Related News
‘என்னோடு விளையாடு’ என் வாழ்வில் திருப்புமுனை படமாக இருக்கும்: பரத்
என்னோடு விளையாடு: குதிரை ரேஸ் கதை
சென்சார் குழுவை குஷிப்படுத்தி க்ளீன் \'யு\' சான்று பெற்ற . . .\'துள்ளி விளையாடு\'!
மும்பையில் துள்ளி விளையாடு இசையை வெளியிட்ட விஜய்!
காதலனுடன் சேர்த்து வைக்க கோரி போலீசில் தஞ்சம்புகுந்த நடிகை !
அங்காடித்தெரு புகழ் மகேஷ் நடிக்கும் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions