என்னோடு விளையாடு: குதிரை ரேஸ் கதை

Bookmark and Share

என்னோடு விளையாடு: குதிரை ரேஸ் கதை

பரத் நடிக்கும் புதிய படம் என்னோடு விளையாடு. இதில் அவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக மதயானைக்கூட்டம் கதிர், சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்கள். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மோசஸ் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார்.

அருண் கிருஷ்ணசாமி இயக்குகிறார்.  இது குதிரை ரேஸை மையமாக கொண்ட படம். குதிரை ரேஸ் பலருடைய வாழ்க்கையை நாசமாக்கி இருக்கிறது. அந்த குதிரை ரேஸ் ஏன் ஒரு மனிதனை அடிமையாக்குகிறது. குதிரை ரேசில் இருக்கும் அண்டர்கிரவுண்ட் விஷயங்கள்.

ரேசுக்கு குதிரையை தயார்படுத்துவது எப்படி என்பது மாதிரியான டீட்டைல்சுடன் படம் தயாராகிறது. இதற்காக இயக்குனர் அருண் கிருஷ்ணாசாமி இந்தியாவின் முக்கியமான குதிரை ரேஸ் மைதானங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி சில மைதானங்களுக்கு மாறுவேடத்தில் சென்று இரவு அங்கு என்ன நடக்கிறது என்பதையெல்லாம் அறிந்து வந்து அதனையே திரைக்கதையாக்கி இருக்கிறார்.

பரத் குதிரை வீரனாகவும், சாந்தினி கிளாரிட்ஸ்டாகவும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. படத்தின் கிளைமாக்சில் மிகப்பெரிய குதிரை ரேஸ் இடம்பெறுகிறது. பெரும் பொருட் செலவில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக கிண்டி ரேஸ்கிளப்பிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள்


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions